பாடல் #36289
ஜீவ தயாபரனை
🔤 Jeeva Thayaabaranai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவ தயாபரனை சிரமேற் கொள்வோம் ஜெயசீலனேசுவை நாம் ஏற்றிப் போற்றுவோம் 1. உன்னதர் போற்றிடும் உயர் உம்பரன் உதித்தார் உருவாய் மரியிடமாய் இந்நிலம் இறங்கி இருளகற்றி இனிதாய் இகபர சுகம் நல்கினார் 2. பாவம் நிறைந்த நம் சாபம் தீர்க்க தேவாட்டுக் குட்டியாய்ப் பாடுபட ஆவலாய் ஆ! நல்ல ஆயனுமாய் ஆவியைத் தாவியே கொடுத்த வல்ல 3. ஆத்துமத்தைச் சுத்தம் செய்து மீட்டாரே காத்துக்கொள்ளும் வரம் அன்பாய் ஈந்தாரே சாத்தான் மேல் ஜெயம் கொள்ள பெலன் தந்தாரே நேர்த்தியாம் மோட்சபங்கை நமக்கீந்தாரே 4. வானத்திலிருந்தவர் மீண்டும் வருவார் ஞானமா யுலகத்தை நியாயந்தீர்க்கவே ஆனதால் ஆயத்தம் விழித்திருப்போம் ஞானக்கன்னியரைப் போல் காத்திருப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeeva Thayaabaranai Siramaer Kolvom Jeyaseelanaesuvai Naam Aerrip Porruvom 1. Unnathar Porritum Uyar Umbaran Uthitthaar Uruvaay Mariyidamaay Innilam Irangki Irulakarri Inithaay Igapara Sugam Nalkinaar 2. Paavam Niraindha Nam Saabam Theerkka Thaevaattuk Kuttiyaayp Paatubata Aavalaay Aa! Nalla Aayanumaay Aaviyaith Thaaviyae Kotuttha Valla 3. Aatthumatthaich Suttham Seythu Meettaarae Kaatthukkollum Varam Anpaay Eenthaarae Saatthaan Mael Jeyam Kolla Pelan Thanthaarae Naertthiyaam Motsapangkai Namakkeenthaarae 4. Vaanatthilirundhavar Meentum Varuvaar Njaanamaa Yulakatthai Niyaayantheerkkavae Aanathaal Aayattham Vizhitthiruppom Njaanakkanniyaraip Pol Kaatthiruppom