பாடல் #36284
மனுஷனாய் ஏன் அவதரித்தீர்
🔤 Manushanaay Aen Avatharittheer
🎙 சாது. C. செல்வராஜ்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனுஷனாய் ஏன் அவதரித்தீர்? - இந்த மாட்டுக் குடில் தனில் - தேவா பரலோக தேவனே பரம பிதாவே - 2 ஆவியாயிருக்கிற அன்பின் கர்த்தரே - 2 1. ஆதியில் வார்த்தையாயிருந்தீர் - அந்த வார்த்தையே மாமிசமானீர் - தேவா ஆதி அந்தமில்லா ஜோதி பிதாவே - 2 வானங்களைக் கிழித்திறங்கி வந்தீரோ - 2 2. வானம் பூமி யாவும் படைத்தீர் - சர்வ சிருஷ்டிகளையும் சிருஷ்டித்தீர் - இந்த சர்வத்தையும் படைத்தாளும் தேவன் - 2 மாட்டின் முன்னணை தான் உம் படுக்கையோ - 2 3. வார்த்தையால் சர்வமும் தாங்கும் - வல்ல வான பராபரன் இயேசு - தம் வல்லமை நிறைந்த எங்கள் தேவனே - 2 தாழ்மையின் கோலம் ஏன் எடுத்தீரோ - 2 4. யேகோவா கர்த்தர் - எங்கள் எல்லாம் வல்ல தேவன் - இயேசு கர்த்தாதி கர்த்தாவே ராஜாதி ராஜாவே - 2 கந்தைத் துணி தான் உம் போர்வையோ - 2 5. பிதாவின் மடியில் - செல்ல பிளளையாக இருந்தீர் - தேவா எம்மோடிருந்திட இம்மானுவேலராய் - 2 ஈனக்கோலம் தான் எடுத்து வந்திரோ - 2 6. ஜீவன் நிறைந்த தேவனே - எங்கள் ஜீவாதிபதியாம் கர்த்தரே - மெய் ஜீவ ஒளி தரும் ஜீவ பிதாவே - 2 மேசியாவாக மேதினியில் வந்தீரோ - 2 7. ஜனங்களின் பாவங்களை நீக்கி - தேவா கிருபையால் இரட்சித்திடவே தம் இயேசு என்ற இரட்சகராக - 2 இப் பூ உலகில் அவதரித்தீரோ ? 8. பாவத்தின் தண்டனையை - தாமே பாவிகட்காய் அனுபவித்து - தேவா பாவிகளை விட்டகற்றிடவும் - 2 பரமசந்தோஷம் கொடுக்கவும் வந்தீரோ - 2 9. கல்வாரிச் சிலுவை தனில் - கொடும் வேதனைகளை அடைந்து - தேவா பாடுபட்டு ஜீவன் விட்டிடவும் - 2 பரலோக ராஜ்யம் கொடுக்கவும் வந்திரோ - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manushanaay Aen Avatharittheer? - Indha Maattuk Kutil Thanil - Thaevaa Paraloga Devanae Parama Pithaavae - 2 Aaviyaayirukkira Anpin Karttharae - 2 1. Aathiyil Vaartthaiyaayiruntheer - Andha Vaartthaiyae Maamisamaaneer - Thaevaa Aathi Andhamillaa Jothi Pithaavae - 2 Vaananggalaik Kizhitthirangki Vantheero - 2 2. Vaanam Poomi Yaavum Pataittheer - Sarva Sirushtigalaiyum Sirushtittheer - Indha Sarvatthaiyum Pataitthaalum Devan - 2 Maattin Munnanai Thaan Um Patukkaiyo - 2 3. Vaartthaiyaal Sarvamum Thaangkum - Valla Vaana Paraabaran Yesu - Tham Vallamai Niraindha Enggal Devanae - 2 Thaazhmaiyin Kolam Aen Etuttheero - 2 4. Yaekovaa Kartthar - Enggal Ellaam Valla Devan - Yesu Kartthaathi Kartthaavae Raajaathi Raajaavae - 2 Kanthaith Thuni Thaan Um Porvaiyo - 2 5. Pithaavin Matiyil - Sella Pilalaiyaaga Iruntheer - Thaevaa Emmotirunthida Immaanuvaelaraay - 2 Eenakkolam Thaan Etutthu Vanthiro - 2 6. Jeevan Niraindha Devanae - Enggal Jeevaathibathiyaam Karttharae - Mey Jeeva Oli Tharum Jeeva Pithaavae - 2 Maesiyaavaaga Maethiniyil Vantheero - 2 7. Jananggalin Paavanggalai Neekki - Thaevaa Kirupaiyaal Iratsitthidavae Tham Yesu Endra Iratsakaraaga - 2 Ip Poo Ulakil Avatharittheero ? 8. Paavatthin Thandanaiyai - Thaamae Paavigatkaay Anubavitthu - Thaevaa Paavigalai Vittakarridavum - 2 Paramasanthosham Kotukkavum Vantheero - 2 9. Kalvaarich Siluvai Thanil - Kotum Vaedhanaigalai Atainthu - Thaevaa Paatubattu Jeevan Vittidavum - 2 Paraloga Raajyam Kotukkavum Vanthiro - 2