பாடல் #36282
பிறந்தார் இயேசு பிறந்தார்
🎙 சாது. G. தேவநேசன்
பிறந்தார் இயேசு பிறந்தார் இயேசு - 2 பெத்லகேமில் பிள்ளையாக பிறந்தார் இயேசு - 2 தாவீதின் ஊரதிலே தான் தாழ்மையின் கோலம் - 2 1. ஆதி தேவன் உரைப்படியே அதிசய பாலனாகவே ஆதி வார்த்தை யாகும் தேவன் அதிசயமானவரே கன்னிமரி பாலனாக - முன்னணையில் தானுதித்தார் -2 - பிறந் 2. மகிமை தேவன் மானிலத்தில் ஸ்திரீயின் வித்து பிறந்தார் மானிடனாய் அவதரித்தார் மகா மகிமையின் தேவன் பாவிகளை இரட்சிக்கவே - பிறந்தார் இயேசு பாலகனாய் - 2 - பிறந் 3. தீர்க்கரின் உரைப்படியே தேவ திருக்குமாரனாக மாட்டுக் கொட்டகை தனிலே மனு உருவானாரேசு அன்பரேசு இன்பநாதன் - தங்க பாலனாய்ப் பிறந்தார் - 2 - பற 4. சத்தியபரன் சித்தம் கொண்டு தாரணியில் தானுதித்தார் சாத்தானின் தலைநசுக்க சர்வநாதன் பிள்ளையாக மரண அதிபதியை அழிக்க - மானிலத்தில் தான் பிறந்த - 2- பிறந் 5. மானிடரின் பாவம் போக்க மானிடனாய்த் தான் பிறந்தார் மானிடரை இரட்சிக்கவே மனுவேல் நாதன் தான் பிறந்தார் பாவ சாபம் தனை நோக்கி பாவிகளை மீட்பதற்காய் - 2 - பிறந் 6. மகிமைநாதன் மாநிலத்தில் மங்கா பாலனாகப் பிறந்தார் சமாதானம் உய்த்திடவே தங்க பாலனாய்ப் பிறந்த சமாதானப் பிரபு வாக - நாதன் கிறிஸ்து தான் பிறந்தார் - 2