பாடல் #3618
மாமேன்மை பெற்ற வேதமே
🔤 Maamaenmai Pertra Vaedhamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மாமேன்மை பெற்ற வேதமே! உன் ஜோதி வீசுதே. உன் வாக்கைக் கேட்போர் சிந்திப்போர் மா இன்பம் காண்பாரே ஓர் ஏற்ற வார்த்தை சொல்வாயே எத்தன்மை யுள்ளோர்க்கும் ஆ! எல்லை யில்லாச் செல்வமும் உன்னாலே கிடைக்கும். என் பாதை காட்டும் தீபமே என் வழிக் கொளியே என் ஜீவகாலம் என்னுடன் ஒளியாய்ச் செல்லவே. 2. மா கோபம் தப்ப ஓடிட நீ புத்தி சொல்கிறாய் க்ருசெடுத்துப் பின் செல்வோர்க்குப் பேர் வாக்குக் கொடுத்தாய் "ஜீவாற்றில் பானம் பண்ணலாம் மெய் வாஞ்சை உள்ளோரே மா சுத்தர் பாக்யவான்களாம்" என்றருள்கின்றாயே. என் பாதை காட்டும் தீபமே என் வழிக் கொளியே என் ஜீவகாலம் என்னுடன் ஒளியாய்ச் செல்லவே. 3. உன் கண்டிப்பும் எச்சரிப்பும் மா நன்மையானதே மெய் வாஞ்சை ஜெபத்தோடதை நான் ஏற்றுக்கொள்வேனே ஆ! மேன்மை பெற்ற வேதமே! நிர்ப் பாக்ய ராவோமே உன் ஆறுதல் சந்தோஷமும் மெய் வாழ்வும் இன்றியே. என் பாதை காட்டும் தீபமே என் வழிக் கொளியே என் ஜீவகாலம் என்னுடன் ஒளியாய்ச் செல்லவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Maamaenmai Pertra Vaedhamae! Un Jothi Veesuthae. Un Vaakkaik Kaetpor Sinthippor Maa Inbam Kaanpaarae Or Aertra Vaartthai Solvaayae Etthanmai Yullorkkum Aa! Ellai Yillaach Selvamum Unnaalae Kitaikkum. En Paathai Kaattum Theebamae En Vazhik Koliyae En Jeevakaalam Ennudan Oliyaaych Sellavae. 2. Maa Kobam Thappa Otida Nee Putthi Solkiraay Krusetutthup Pin Selvorkkup Paer Vaakkuk Kotutthaay "jeevaarril Paanam Pannalaam Mey Vaanjsai Ullorae Maa Sutthar Paakyavaankalaam" Endrarulkinraayae. En Paathai Kaattum Theebamae En Vazhik Koliyae En Jeevakaalam Ennudan Oliyaaych Sellavae. 3. Un Kantippum Eccharippum Maa Nanmaiyaanathae Mey Vaanjsai Jebatthodathai Naan Aerrukkolvaenae Aa! Maenmai Pertra Vaedhamae! Nirp Paakya Raavomae Un Aarudhal Santhoshamum Mey Vaazhvum Inriyae. En Paathai Kaattum Theebamae En Vazhik Koliyae En Jeevakaalam Ennudan Oliyaaych Sellavae.