பாடல் #36171
விண்ணக ராஜன் வந்தாரே
🔤 Vinnaka Raajan Vanthaarae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணக ராஜன் வந்தாரே தேவாதி தேவன் வந்தாரே உலகத்தை ஜெயிக்க அவர் பிறந்துவிட்டாரே - 2 இம்மானுவேலனாய் பிறந்து விட்டாரே அவர் கிருபை மன உருக்கம் இலவசமாய் கிடைக்க அவர் பாதை என்றும் நடக்க தேடி நம்மில் வந்தாரே காலத்தை வென்றவர் ஜீவனை தந்தவர் இங்கு வந்தார் மேய்ப்பர்கள் சூழ்ந்திட தூதர்கள் பாடிட இங்கு பிறந்தார் - 2 கர்த்தாதி கர்த்தராக வந்தார் கருணையின் உள்ளம் நமக்கு தந்தார் அவர் நாமம் மாறா நாமம் இனிமையான நாமம் - 2 - விண்ணக பாவத்தை ஏற்றிட சாபத்தை சுமந்திட இங்கு வந்தார் நித்திய ஜீவனை நமக்கு தந்திட இங்கு பிறந்தார் அதிசயமானவராய் வந்தார், சமாதான நிறைவை நமக்கு தந்தார் அவர் நாமம் வல்ல நாமம் மேன்மையான நாமம் - 2 - விண்ணக ஏழையை நேசிக்க ஏழ்மையின் கோலமாய் இங்கு வந்தார் மனுக்குலம் மீட்டிட மண்ணின் மைந்தனாய் இங்கு பிறந்தார் தேவாதி தேவனாக வந்தார், ஜீவ பலியாக தம்மை தந்தார் அவர் நாமம் நல்ல நாமம் மதுரமான நாமம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnaka Raajan Vanthaarae Thaevaathi Devan Vanthaarae Ulakatthai Jeyikka Avar Piranthuvittaarae - 2 Immaanuvaelanaay Piranthu Vittaarae Avar Kirupai Mana Urukkam Ilavasamaay Kitaikka Avar Paathai Enrum Natakka Thaeti Nammil Vanthaarae Kaalatthai Vendravar Jeevanai Thandhavar Ingku Vanthaar Maeypparkal Soozhnthida Thoodharkal Paatida Ingku Piranthaar - 2 Kartthaathi Karttharaaga Vanthaar Karunaiyin Ullam Namakku Thanthaar Avar Naamam Maaraa Naamam Inimaiyaana Naamam - 2 - Vinnaka Paavatthai Aerrida Saabatthai Sumanthida Ingku Vanthaar Nitthiya Jeevanai Namakku Thanthida Ingku Piranthaar Athisayamaanavaraay Vanthaar, Samaathaana Niraivai Namakku Thanthaar Avar Naamam Valla Naamam Maenmaiyaana Naamam - 2 - Vinnaka Aezhaiyai Naesikka Aezhmaiyin Kolamaay Ingku Vanthaar Manukkulam Meettida Mannin Maindhanaay Ingku Piranthaar Thaevaathi Devanaaga Vanthaar, Jeeva Paliyaaga Thammai Thanthaar Avar Naamam Nalla Naamam Mathuramaana Naamam