பாடல் #36143
கண்ணீரின் பாதையில்
🔤 Kanneerin Paathaiyil
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணீரின் பாதையில் நான் இருந்தேன் கனிவோடு என்னை அரவணைத்தார் இயேசு என்னோடு இல்லாதிருந்தால் மரித்து நரகம் போயிருப்பேன் - 2 1. கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்தாலென்ன தாங்கும் பெலன் எந்தன் இயேசு உண்டு - 2 அற்புதராம் எந்தன் இயேசு ராஜன் அருகினில் இருப்பதால் துதித்திடுவேன்- 2 2. பசியும் பட்டினி வந்தால் என்ன பரலோக மன்னாவை தந்திடுவார்- 2 ஆபிரகாம் தேவன் என்னோடு உண்டு விசுவாசித்து நானும் ஜெயம் பெறுவேன்- 2 3. கெர்ச்சிக்கும் சிங்கம்போல் சாத்தான் வந்தான் ஆவியானவர் ஜெயம் தந்தார் திறந்த வாசலை என் முன் வைத்தார்- 2 தாவீதின் திறவுகோலை தந்தார்- 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanneerin Paathaiyil Naan Irunthaen Kanivotu Ennai Aravanaitthaar Yesu Ennotu Illaathirunthaal Maritthu Narakam Poyiruppaen - 2 1. Kalakkanggal Nerukkanggal Soozhnthaalenna Thaangkum Pelan Endhan Yesu Untu - 2 Arpudharaam Endhan Yesu Raajan Arukinil Iruppathaal Thuthitthituvaen- 2 2. Pasiyum Pattini Vanthaal Enna Paraloga Mannaavai Thanthituvaar- 2 Aapirakaam Devan Ennotu Untu Visuvaasitthu Naanum Jeyam Peruvaen- 2 3. Kerchsikkum Singgampol Saatthaan Vanthaan Aaviyaanavar Jeyam Thanthaar Thirandha Vaasalai En Mun Vaitthaar- 2 Thaaveethin Thiravukolai Thanthaar- 2