பாடல் #36136
உம்மைப்போல யாருண்டு
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
உம்மைப்போல யாருண்டு எந்தன் இயேசுவே எனக்காக யாவும் செய்வீர் உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டீர் - உம்மைப்போல யோபு இழந்தபோதிலும் யோபுவோடு இருந்தீரே நண்பர்கள் வெறுத்து பேசினாலும் வார்த்தையாலே தேற்றினீரே - உம்மைப்போல சரீரப்பாதையில் பாடுகள் ஜீவன் மாத்திரம் உம் கையிலே சத்துரு வெள்ளம் போல் வந்தாலுமே ஆவியானவர் கொடி ஏற்றுவார் - உம்மைப்போல சோதனையை ஜெயித்தபின் இரட்டிப்பான அசீர் தந்தீரே நண்பருக்காக ஜெபித்தபின் சிறையிருப்பை மாற்றினீரே - உம்மைப்போல