பாடல் #36127
பொல்லாத சாத்தானே உனக்கிங்கு இடமில்லை
🔤 Pollaadha Saatthaanae Unakkingku Idamillai
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொல்லாத சாத்தானே உனக்கிங்கு இடமில்லை ! உலகத்தை ஜெபித்தவர் என்னுடன் இருக்கின்றார் ! அவரின் இரத்தத்தாலே கழுவப்பட்டிருக்கின்றேன் ! அவரின் கரங்களால் வரையப்பட்டிருக்கின்றேன் ! கானாஊரிலே அற்புதத்தை செய்தவரே மரித்த லாசருவை உயர்பெற செய்தவர் என்னுடன் இருக்கையிலே எனக்கொன்றும் திகிலில்லையே ! - - 2 அவரே என்னுள்ளே வாசம் செய்கின்றார் எந்நாளும் தாழ்ச்சி அடைவதில்லையே ! சிங்க கெபியிலே தானியேலை காத்தவர். அக்கினி சூளையிலே மூவரை மீட்டவர். என்னுடன் இருக்கையிலே எனக்கொன்றும் பயமில்லையே அவரே என்னுள்ளே வாசம் செய்கின்றார் எந்நாளும் அழிவை காண்பதில்லை. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும் எனக்கொன்றும் பயமில்லை என் நேசர் இருக்கின்றார் அவரின் நாமத்தால் ஜெயம் பெற்றிடுவேன் அவரின் பெலத்தால் உன்னை வென்றிடுவேன் - பொல்லாத சாத்தானே பொல்லாத சாத்தானே என் வாழ்வில் இடமில்லை என்னையே முற்றிலும் அவரிடம் தந்துள்ளேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pollaadha Saatthaanae Unakkingku Idamillai ! Ulakatthai Jepitthavar Ennudan Irukkinraar ! Avarin Ratthatthaalae Kazhuvappattirukkinraen ! Avarin Karanggalaal Varaiyappattirukkinraen ! Kaanaaoorilae Arpudhatthai Seythavarae Marittha Laasaruvai Uyarpera Seythavar Ennudan Irukkaiyilae Enakkonrum Thikilillaiyae ! - - 2 Avarae Ennullae Vaasam Seykinraar Ennaalum Thaazhchsi Ataivathillaiyae ! Singga Kepiyilae Thaaniyaelai Kaatthavar. Akkini Soolaiyilae Moovarai Meettavar. Ennudan Irukkaiyilae Enakkonrum Payamillaiyae Avarae Ennullae Vaasam Seykinraar Ennaalum Azhivai Kaanpathillai. Etthanai Innalkal En Vaazhvil Vanthaalum Enakkonrum Payamillai En Naesar Irukkinraar Avarin Naamatthaal Jeyam Perrituvaen Avarin Pelatthaal Unnai Venrituvaen - Pollaadha Saatthaanae Pollaadha Saatthaanae En Vaazhvil Idamillai Ennaiyae Murrilum Avaridam Thanthullaen