பாடல் #36090
யார் என்ன சொன்னாலென்ன
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
யார் என்ன சொன்னாலென்ன என் நேசர் என்னோடு உண்டு யார் என்னை வெறுத்தால் என்ன என் மீட்பர் என்னோடு உண்டு உயிரோடு கலந்தவரை உணர்வோடு துதித்திடுவேன் - 2 - என் ஒருபோதும் கைவிடார் ஒருநாளும் மாறிடார் ஒருநாளும் என்னை விட்டு விலகிப் போகாதவர் விலகிப் போகாதவர் எனக்குள்ளே இருக்கின்ற என் தேவன் பெரியவர் எனக்காக யாவையுமே செய்து முடித்திடுவார் - 2 செய்து முடித்திடுவார் என் இயேசு சீக்கிரம் மேகத்தில் வருவாரே என் கண்ணீர் யாவையுமே என் இயேசு துடைத்திடுவார் - 2 என் இயேசு துடைத்திடுவார்