பாடல் #36087
மண்ணை நம்பி மரம்
🔤 Mannai Nampi Maram
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணை நம்பி மரம் இருக்கு மரம் நம்பி கிளை இருக்கு கிளை நம்பி இலை இருக்கு இயேசப்பா உம்மை நம்பி நான் இருக்கேன் இயேசப்பா - 2 இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா எனக்காய் யாவற்றையும் செய்கின்ற கர்த்தரே என்னோடு வாழ்பவரே உமக்கே ஸ்தோத்திரம் - 2 உம்மோடு நான் வாழ மிக மிக விருப்பமே வேண்டாத காரியங்கள் என்னை விட்டு அகற்றுமே ஆகாயத்துப் பறவையையும் போஷிக்கும் கர்த்தரே காட்டு மலர்களுக்கும் வர்ணம் தந்த தேவனே - 2 அவைகளைப் பார்க்கிலும் உயர்ந்தவன் அல்லவா - 2 வீணான பயங்களை (கவலைகளை) என்னை விட்டு அகற்றுமே இயேசப்பா உயிரோடு இருக்கின்ற மீட்பரை நான் காண்பேன் என்று சொல்லி பாடுகளை இனிமையாய் சகித்து - 2 இரட்டிப்பான நன்மைகளை பெற்றுக்கொண்ட யோபுவைப்போல பொறுமையை எனக்குத்தாரும் உன்னத தேவனே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannai Nampi Maram Irukku Maram Nampi Kilai Irukku Kilai Nampi Ilai Irukku Yesappaa Ummai Nampi Naan Irukkaen Yesappaa - 2 Yesappaa Yesappaa Yesappaa Yesappaa Yesappaa Yesappaa Yesappaa Yesappaa Enakkaay Yaavarraiyum Seykindra Karttharae Ennotu Vaazhpavarae Umakkae Sthotthiram - 2 Ummotu Naan Vaazha Miga Miga Viruppamae Vaentaadha Kaariyanggal Ennai Vittu Agarrumae Aakaayatthup Paravaiyaiyum Poshikkum Karttharae Kaattu Malarkalukkum Varnam Thandha Devanae - 2 Avaigalaip Paarkkilum Uyarndhavan Allavaa - 2 Veenaana Payanggalai (kavalaigalai) Ennai Vittu Agarrumae Yesappaa Uyirotu Irukkindra Meetparai Naan Kaanpaen Enru Solli Paatugalai Inimaiyaay Sakitthu - 2 Irattippaana Nanmaigalai Perrukkonda Yopuvaippola Porumaiyai Enakkutthaarum Unnatha Devanae - 2