பாடல் #36060
ஸ்தோத்திரிப்பேன் ஸ்தோத்திரிப்பேன் ஸ்தோத்திரிப்பேன்
🔤 Sthotthirippaen Sthotthirippaen Sthotthirippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரிப்பேன், ஸ்தோத்திரிப்பேன், ஸ்தோத்திரிப்பேன் - நான் - 2 என் தேவனையே நன்றியுடன் ஸ்தோத்திரிப்பேன் நான் - 2 மாட்டுத்தொழுவில் பிறந்த மகிமையின் தேவா! - 2 மனுஷ ரூபம் எடுத்த உம்மை ஸ்தோத்திரிப்பேன் நான் - 2 மனித அவதாரமான மாசற்ற தேவா! - 2 தாழ்மை கோலம் எடுத்த உம்மை ஸ்தோத்திரிப்பேன் நான் - 2 பாதகர்க்காய் நீதி வழி யோதித் தந்தோரே! - 2 பாரிலும்மையே நினைத்து ஸ்தோத்திரிப்பேன் நான் - 2 கெத்செமனே தோட்டமதில் வேண்டுதல் செய்து - 2 ரெத்தவேர்வை சிந்தினோரை ஸ்தோத்திரிப்பேன் நான் - 2 சிலுவையை சுமந்து கொண்டு நடந்து போனோரே - 2 திருப்பாதம் இரண்டும் முத்தம் செய்து ஸ்தோத்திரிப்பேன் நான் - 2 சிலுவையில் தொங்கி மரித்து உயிர்த்தெழுந்தோரே - 2 நித்தம் ஜீவிக்கின்ற உம்மை ஸ்தோத்திரிப்பேன் நான் - 2 ஆரவாரத்தோடுதாமே வானிலிருந்து - 2 திரும்ப வருகின்றவரை ஸ்தோத்திரிப்பேன் நான் - 2 என்றைக்கு நான் வந்து காண்பேன் திருசமுகத்தை - 2 நோக்கி நோக்கி வாஞ்சிக்கிறேன் திருசமுகத்தை 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthirippaen, Sthotthirippaen, Sthotthirippaen - Naan - 2 En Devanaiyae Nanriyudan Sthotthirippaen Naan - 2 Maattutthozhuvil Pirandha Makimaiyin Thaevaa! - 2 Manusha Roobam Etuttha Ummai Sthotthirippaen Naan - 2 Manidha Avathaaramaana Maasartra Thaevaa! - 2 Thaazhmai Kolam Etuttha Ummai Sthotthirippaen Naan - 2 Paadhakarkkaay Neethi Vazhi Yothith Thanthorae! - 2 Paarilummaiyae Ninaitthu Sthotthirippaen Naan - 2 Kethsemanae Thottamathil Vaentudhal Seythu - 2 Retthavaervai Sinthinorai Sthotthirippaen Naan - 2 Siluvaiyai Sumanthu Kontu Natanthu Ponorae - 2 Thiruppaadham Irantum Muttham Seythu Sthotthirippaen Naan - 2 Siluvaiyil Thongki Maritthu Uyirtthezhunthorae - 2 Nittham Jeevikkindra Ummai Sthotthirippaen Naan - 2 Aaravaaratthotuthaamae Vaanilirunthu - 2 Thirumba Varukindravarai Sthotthirippaen Naan - 2 Enraikku Naan Vanthu Kaanpaen Thirusamugatthai - 2 Nokki Nokki Vaanjsikkiraen Thirusamugatthai 2