பாடல் #36053
ஆ எந்தன் பாக்கித்தை
🔤 Aa Endhan Paakkitthai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.ஆ! எந்தன் பாக்கித்தை எண்ணிடவே எனக்கானந்தமே பரமானந்தமே மேதினி கஷ்டங்கள் மறந்து வேகம் எந்தன் பாக்கிய தேசமதில் சேர்ந்திடுவேன் அதின் மகிமையை காண உள்ளம் கொதித்திடுதே அன்று மகிபரை என்றும் வாழ்த்தி துதித்திடுவேன் 2.பூலோக மேன்மைகள் ஒன்றும் வேண்டாம் இப்பூவின் சம்பாத்தியங்கள் ஒன்றும் வேண்டாம் லோகம் எனக்கும் நான் லோகத்திற்கும் முற்றும் யாகமாய் அர்ப்பணம் செய்கிறேன் நான் நாச லோகமே உன் நேசம் வெறும் கிலேசமல்லவோ சொர்க்கலோக வாசம் எண்ண உள்ளம் வாஞ்சித்திடுதே 3. இமைப்பொழுது நேரிடும் கஷ்டமெல்லாம் என் என்னிடா மகிமையின் பதவி தானே சடுதியில் வரும் நேசர் அரைநொடியில் நான் அடைந்திடும் மணவறை மகிழ் வாசமே எந்தன் அழுகையின் கண்ணீரை துடைத்து விடுவார் அவர் அடிதொழு புகழ்பாடி ஆர்ப்பரிப்பேன் 4.கோடா கோடி தூதர் போற்றிடவே கவிபாடும் மனோகர கீதங்களும் வீணைகள் கைகளில் ஏந்தி நின்று என்றும் வீண்டவர் சங்கீதம் பாடிடுவார் அன்று விண்ணில் நின்று அண்ணலே போற்றிடுவேன் அங்கு விண்ணவர் சாயலாய் வாழ்த்திப் பாடிடுவேன் 5.சிலுவை சுமந்து நான் ஏகிடுவேன் அவர் சிலுவையை எங்கும் கூறி உயர்த்திடுவேன் சிலுவையின் பாடுகள் பெருகிடவே நான் சிலுவையால் ஜெயகீதம் பாடிடுவேன் அப்போ சிலுவையின் மேன்மையால் களித்திடுவேன் நான் சிலுவையால் தரும் முடி அணிந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.aa! Endhan Paakkitthai Ennidavae Enakkaanandhamae Paramaanandhamae Maethini Kashtanggal Maranthu Vaegam Endhan Paakkiya Thaesamathil Saernthituvaen Athin Makimaiyai Kaana Ullam Kothitthituthae Anru Makibarai Enrum Vaazhtthi Thuthitthituvaen 2.poologa Maenmaigal Onrum Vaentaam Ippoovin Sampaatthiyanggal Onrum Vaentaam Logam Enakkum Naan Logatthirkum Murrum Yaagamaay Arppanam Seykiraen Naan Naasa Logamae Un Naesam Verum Kilaesamallavo Sorkkaloga Vaasam Enna Ullam Vaanjsitthituthae 3. Imaippozhuthu Naeritum Kashtamellaam En Ennitaa Makimaiyin Pathavi Thaanae Satuthiyil Varum Naesar Arainotiyil Naan Atainthitum Manavarai Makizh Vaasamae Endhan Azhukaiyin Kanneerai Thutaitthu Vituvaar Avar Atithozhu Pugazhpaati Aarpparippaen 4.kotaa Koti Thoodhar Porridavae Kavipaatum Manogara Keedhanggalum Veenaigal Kaigalil Aenthi Ninru Enrum Veendavar Sangkeedham Paatituvaar Anru Vinnil Ninru Annalae Porrituvaen Angku Vinnavar Saayalaay Vaazhtthip Paatituvaen 5.siluvai Sumanthu Naan Aekituvaen Avar Siluvaiyai Engkum Koori Uyartthituvaen Siluvaiyin Paatugal Perukidavae Naan Siluvaiyaal Jeyakeedham Paatituvaen Appo Siluvaiyin Maenmaiyaal Kalitthituvaen Naan Siluvaiyaal Tharum Muti Aninthituvaen