பாடல் #3605
மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை
🔤 Maatsi Mikum Motsa Nakar Makimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாட்சி மிகும் மோட்ச நகர் மகிமை என் சொல்வேன் அந்த மங்களம் சேர் மாளிகைக்குள் என்று சேருவேன். 1. பட்டணத்து வீதியெல்லாம் சுத்தப் பொன்னாமே - அங்கு பாடுவோரும் ஆடுவோரும் கோடா கோடியே. 2. முத்து மயமா யிலங்கும் பட்டணமது - நமது முன்னோரெல்லாம் போகப் போகும் பட்டணமது. 3. ஜீவ நதி பாயுகின்ற பட்டணமது - நிதம் சித்திர முடனிலங்கும் பட்டணமது. 4. சாவு துக்கமே இல்லாத பட்டணமது - நிதம் சங்கீத முடனிலங்கும் பட்டணமது. 5. நாமெல்லாரும் நாடுகின்ற பட்டணமது - நமது நாதரேசு வீற்றிருக்கும் பட்டணமது.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maatsi Mikum Motsa Nakar Makimai En Solvaen Andha Manggalam Saer Maalikaikkul Enru Saeruvaen. 1. Pattanatthu Veethiyellaam Sutthap Ponnaamae - Angku Paatuvorum Aatuvorum Kotaa Kotiyae. 2. Mutthu Mayamaa Yilangkum Pattanamathu - Namathu Munnorellaam Pogap Pokum Pattanamathu. 3. Jeeva Nathi Paayukindra Pattanamathu - Nidham Sitthira Mudanilangkum Pattanamathu. 4. Saavu Thukkamae Illaadha Pattanamathu - Nidham Sangkeedha Mudanilangkum Pattanamathu. 5. Naamellaarum Naatukindra Pattanamathu - Namathu Naadharaesu Veerrirukkum Pattanamathu.