பாடல் #36017
மானிடரை மீட்டிடும்
🔤 Maanidarai Meettitum
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மானிடரை மீட்டிடும் மீட்பராய் இயேசு மானிடனாய் மண்ணுலகில் பிறந்தாரே பாவம் போக்கிட பிறந்தவர் இயேசு சாபம் தீர்த்திட பிறந்தவர் இயேசு இருள் நீக்கிட இன்பம் தந்திட இயேசு பிறந்தாரே மகிமையை வெறுத்து இயேசு மானிட ரூபமாய் மக்களின் பாவம் போக்க மனுவாய் பிறந்தாரே அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் வல்லமையுள்ளவர் சமாதானப்பிரபு வார்த்தையாய் வந்தாரே இழந்ததை தேடிட வந்த இறைமகன் இயேசுவே ஈசாயின் வேரிலே பிறந்த இறைவன் இயேசுவே வழியும் வாய்மையுமானவராக வாழ்க்கையின் உறைவிடம் ஆனவராக விண்ணவர் பிறந்தாரே உன்னதமானவர் இவர் உலக இரட்சகர் உன்னையும் என்னையும் பரலோகில் சேர்க்க உதித்தவர் உள்ளத்தில் இருந்திட வந்தவர் இயேசு உண்மையாய் வாழ உதவிடும் இயேசு உனக்காய் பிறந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maanidarai Meettitum Meetparaay Yesu Maanidanaay Mannulakil Piranthaarae Paavam Pokkida Pirandhavar Yesu Saabam Theertthida Pirandhavar Yesu Irul Neekkida Inbam Thanthida Yesu Piranthaarae Makimaiyai Verutthu Yesu Maanida Roobamaay Makkalin Paavam Pokka Manuvaay Piranthaarae Athisayamaanavar Aalosanaik Kartthar Vallamaiyullavar Samaathaanappirapu Vaartthaiyaay Vanthaarae Izhandhathai Thaetida Vandha Iraimakan Yesuvae Eesaayin Vaerilae Pirandha Iraivan Yesuvae Vazhiyum Vaaymaiyumaanavaraaga Vaazhkkaiyin Uraividam Aanavaraaga Vinnavar Piranthaarae Unnathamaanavar Ivar Ulaka Iratsakar Unnaiyum Ennaiyum Paralokil Saerkka Uthitthavar Ullatthil Irunthida Vandhavar Yesu Unmaiyaay Vaazha Udhavitum Yesu Unakkaay Piranthaarae