பாடல் #36005
இயேசு எனக்கு செய்த
🔤 Yesu Enakku Seytha
🎙 Pr. ஞானப்பிரகாசம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு எனக்கு செய்த நன்மையை நினைத்து துதித்து பாடுவேன் சொல்லி முடியாத ஈவை எனக்கு தந்தார் சொல்லி பாடுவேன் ஸ்தோத்திரம் இயேசு நாதா ஸ்தோத்திரம் இயேசு நாதா(4) அறிவுக்கு எட்டாத அற்புதம் செய்திட்டார் இயேசுவை ஸ்தோத்தரிப்பேன் நினைவுக்கு மேலாக சிந்திக்க முடியாத நன்மைகள் எனக்கு செய்தார் பெலவீன நேரத்தில் சோர்வான வேளையில் புதுபெலம் எனக்குத் தந்தார் நிர்மூலம் ஆகாமல் என் கால்கள் சறுக்காமல் நித்தமும் காத்துக் கொண்டார் ஊழியப் பாதையில் ஓடி உழைத்திட உற்சாகம் எனக்குத் தந்தார் தேவைகள் சந்தித்தார் தடைகளை நீக்கினார் தவறாமல் பாதுகாத்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Enakku Seytha Nanmaiyai Ninaitthu Thuthitthu Paatuvaen Solli Mutiyaadha Eevai Enakku Thanthaar Solli Paatuvaen Sthotthiram Yesu Naathaa Sthotthiram Yesu Naathaa(4) Arivukku Ettaadha Arpudham Seythittaar Yesuvai Sthottharippaen Ninaivukku Maelaaga Sinthikka Mutiyaadha Nanmaigal Enakku Seythaar Pelaveena Naeratthil Sorvaana Vaelaiyil Puthupelam Enakkuth Thanthaar Nirmoolam Aakaamal En Kaalkal Sarukkaamal Nitthamum Kaatthuk Kontaar Oozhiyap Paathaiyil Oti Uzhaitthida Ursaagam Enakkuth Thanthaar Thaevaigal Santhitthaar Thataigalai Neekkinaar Thavaraamal Paathukaatthaar