பாடல் #35940
பாத்திரரே பாத்திரரே துதிக்கு
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
பாத்திரரே பாத்திரரே துதிக்கு பாத்திரரே பாத்திரரே பாத்திரரே மகிமைக்கு பாத்திரரே பாத்திரரே பாத்திரரே வல்லமைக்கு பாத்திரரே 1. வானம் பூமி யாவையுமே வார்த்தையினாலே படைத்தவரே மனிதனை மண்ணால் உருவாக்கி நாசியில் சுவாசத்தை ஊதினீரே 2. மனிதனின் சுவாசத்தை கைப்பிடியில் வைத்து இருப்பவரே தண்ணீரையெல்லாம் கைப்பிடியால் அளந்து பார்த்தவரே 3. பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி வைத்தவரே மலைகளையெல்லாம் தாராசிலே நிறுத்திப் பார்த்தவரே 4. மனிதனின் பாவத்தை சிலுவையில் சுமந்து தீர்த்தவரே ம னிதனை மறுரூபமாக்கிடவே மீண்டும் வருபவரே 5. மனிதனின் உருவத்தை உம் உள்ளங்கையில் வரைந்து வைத்தவரே நட்சத்திர கூட்டம் முழுவதையும் பெயர்ச்சொல்- அழைப்பவரே