பாடல் #3594
இருள் சூழ்ந்த வேளையில்
🔤 Irul Soozhndha Vaelaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே போதுமே மனம் சோர்ந்த நேரத்தில் உம் அன்பே போதுமே (2) 1. கவலை மறந்தது உந்தன் வாக்காலே கண்ணீர் குறைந்தது உந்தன் அன்பாலே மனம் நிறைந்தது உந்தன் சொல்லாலே பாவம் தீர்ந்தது உந்தன் தயாவாலே உம்மை பார்த்த வேளை என்னை மறந்து போனேன் உம்மை நோக்கி வந்தேன் உம்மை நாடி நின்றேன் கைவிடப்படல ஏமாற்றமடைய நீர் என்னை விடல எப்போதுமே (2) 2. தவிப்பு குறைந்தது தந்தை உம்மாலே தைரியம் வந்தது தேவன் தம்மாலே பேர் பெற்றேனே உந்தன் பேராலே ஜெயம் கொண்டேனே வேந்தன் உம்மாலே உம்மை பார்த்த வேளை என்னை மறந்து போனேன் உம்மை நோக்கி வந்தேன் உம்மை நாடி நின்றேன் கைவிடப்படல ஏமாற்றமடைய நீர் என்னை விடல எப்போதுமே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irul Soozhndha Vaelaiyil Um Anpae Pothumae Manam Sorndha Naeratthil Um Anpae Pothumae (2) 1. Kavalai Marandhathu Undhan Vaakkaalae Kanneer Kuraindhathu Undhan Anpaalae Manam Niraindhathu Undhan Sollaalae Paavam Theerndhathu Undhan Thayaavaalae Ummai Paarttha Vaelai Ennai Maranthu Ponaen Ummai Nokki Vanthaen Ummai Naati Ninraen Kaividappatala Aemaartramataiya Neer Ennai Vidala Eppothumae (2) 2. Thavippu Kuraindhathu Thanthai Ummaalae Thairiyam Vandhathu Devan Thammaalae Paer Perraenae Undhan Paeraalae Jeyam Kontaenae Vaendhan Ummaalae Ummai Paarttha Vaelai Ennai Maranthu Ponaen Ummai Nokki Vanthaen Ummai Naati Ninraen Kaividappatala Aemaartramataiya Neer Ennai Vidala Eppothumae (2)