பாடல் #35915
உயிரே என் ஆருயிரே
🎙 கிறிஸ்தவ பாடல்
உயிரே என் ஆருயிரே என் உயிரே உம்மை மறவேன்-2 உம் பாதம் சேர்ந்தேனே என்னையே தொலைத்தேனே உம் அன்பால் நிதம் நிதம் என்னை தொலைத்தேனே உம் அன்பின் மலரிலே எந்நாளும் வாசம் நான் அபிஷேக தென்றலிலே மகிழ்ந்திடும் சோலை நான்-2 ஓ.. ஓ... என் சுவாசமே ஓ..ஓ.. என் உயிர் மூச்சே-2 உம் மார்பில் சாய்ந்தாலே என்னையே மறப்பேனே உம் பாச நேசத்தால் என்னை மறப்பேனே உம் பாச மழையிலே எந்நாளும் துளிகள் நான் உம் பிரசன்ன காற்றிலே மகிழ்ந்திடும் மனிதன் நான்-2