பாடல் #35888
ஸ்தோத்திரம் செய்குவேன்
🔤 Sthotthiram Seykuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் செய்குவேன் தேவனுக்கு மகிமையாய் கிருபை பெருகவே - 2 நேத்திரம் போல் காத்தணைத்தார் வாக்குமாறா தேவன் - 2 சாற்றுவேன் துதிகளை ஏழை எந்தன் நாவினால் என்றுமவருக்கே - 2 காத்திருந்து புதியகிருபை பெற்று நாட்கள் தோறும் - 2 போற்றுவேன் புனிதனை பூதலத்தில் என்றுமே புதுமையாக ஊக்கமான அன்புடனே நேசர் சேவைசெய்வேன் - 2 நீக்குவார் குறைகளை அன்பரே தம்நிறைவினால் ஆசியருளுவார் காத்திடுவார் கபடற்றோரைக் கைவிடாமல் என்றும் - 2 மாசற்ற அன்பினால் மானிடரை நேசிக்கும் மகிமை தேவனே நானுனக்கு போதித்து நடக்கும் வழிகாட்டி யோசனை சொல்லுவேன் என்றுரைத்த தேவனோடென்றும் ஜீவிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Seykuvaen Devanukku Makimaiyaay Kirupai Perugavae - 2 Naetthiram Pol Kaatthanaitthaar Vaakkumaaraa Devan - 2 Saarruvaen Thuthigalai Aezhai Endhan Naavinaal Enrumavarukkae - 2 Kaatthirunthu Puthiyakirupai Perru Naatkal Thorum - 2 Porruvaen Punidhanai Poodhalatthil Enrumae Puthumaiyaaga Ookkamaana Anpudanae Naesar Saevaiseyvaen - 2 Neekkuvaar Kuraigalai Anbarae Thamniraivinaal Aasiyaruluvaar Kaatthituvaar Kapatarroraik Kaivitaamal Enrum - 2 Maasartra Anpinaal Maanidarai Naesikkum Makimai Devanae Naanunakku Pothitthu Natakkum Vazhikaatti Yosanai Solluvaen Enruraittha Devanotenrum Jeevippaen