பாடல் #35882
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
🔤 Allaelooyaa Allaelooyaa Allaelooyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! இயேசு நாதருக்கே! 2 1. அல்பகல் ஆர்ப்பரித்து எமதாண்டவர் அடிபணிந்து - 2 ஏராளமாம் துதி என்றைக்கும் சாற்றியே ஏகனையே துதிப்போம் - 2 2. பாவங்கள் பரிகரித்து ஆவலோடெம்மை அரவணைத்து - 2 தாபரமான இம்மானு வேலனையே தயவுடன் ஸ்தோத்திரிப்போம் - 2 3. நடுச்சுவரைத் தகர்த்து அன்பிலெடுத்தெமையே நிறுத்தி - 2 நடத்திட நமக்கொரு நாயகன் நாதரை ஸ்தோத்தரிப்போம் - 2 4. நித்திய பாக்கியமே நிர்மலன் நமக்கீந்ததுமே நித்திய அன்பு நீசரில் வைத்தால் நித்தியம் ஸ்தோத்திரிப்போம் - 2 5. அசையாத ராஜ்ஜியமே நமக் கன்புடனாயத்தமாய் - 2 நசரேயனுரைப்படி நாமு மடைந்துமே ராஜனை ஸ்தோத்திரிப்போம் - 2 6. மகிமையின் சாயலுடன் நாம் அனைவரும் வாழ்ந்திடுவோம் - 2 அகமகிழ்வோடங்கு ஆர்ப்பரிப்போடே மகிபனை ஸ்தோத்திரிப்போம் - 2 7. பொற்தளவீதிதனில் உள்ள சுத்த மகிமைதனை - 2 சுற்றி நடந்துமே உற்றிடும் வேளை கொற்றவனைத் துதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa! Yesu Naadharukkae! 2 1. Alpakal Aarpparitthu Emathaandavar Atibaninthu - 2 Aeraalamaam Thuthi Enraikkum Saarriyae Aeganaiyae Thuthippom - 2 2. Paavanggal Parigaritthu Aavalotemmai Aravanaitthu - 2 Thaabaramaana Immaanu Vaelanaiyae Thayavudan Sthotthirippom - 2 3. Natuchsuvaraith Thakartthu Anpiletutthemaiyae Nirutthi - 2 Natatthida Namakkoru Naayakan Naadharai Sthottharippom - 2 4. Nitthiya Paakkiyamae Nirmalan Namakkeendhathumae Nitthiya Anpu Neesaril Vaitthaal Nitthiyam Sthotthirippom - 2 5. Asaiyaadha Raajjiyamae Namak Kanpudanaayatthamaay - 2 Nasaraeyanuraippati Naamu Matainthumae Raajanai Sthotthirippom - 2 6. Makimaiyin Saayaludan Naam Anaivarum Vaazhnthituvom - 2 Agamakizhvodangku Aarpparippotae Makibanai Sthotthirippom - 2 7. Porthalaveethidhanil Ulla Suttha Makimaidhanai - 2 Surri Natanthumae Urritum Vaelai Kortravanaith Thuthippom