பாடல் #35853
பார சிலுவையிலே
🔤 Paara Siluvaiyilae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பார சிலுவையிலே பரன் இயேசு உயிர் கொடுத்தார் பாசம் நிறைந்தவராய் பரன் உன்னை தான் கேட்கின்றார் இயேசுவை விட்டு தூரம் போனாய் இந்த உலகத்தை பின்பற்றி போனாயோ அவரிடத்தில் என்ன அநியாயம் கண்டாய் சொல் நண்பனே வியாதியினால் வந்த வேதனையோ தோல்வியினால் வந்த துயரங்களோ எந்த நிலையில் நீ இருந்தாலும் சொந்த மகனாக மாற்றிடுவார் காயங்கள் உனக்காய் அடைந்தவரே கண்ணீர் உனக்காய் வடித்தவரே கல்வாரியில் உயிர் கொடுத்தவரே கரம் நீட்டி அழைக்கிறார் ஓடி நீ வா சொந்த மகனென்று பாராமல் அவரையே உனக்காய் கொடுத்திட்டவர் எதை உனக்கு இன்று தரமாட்டார் நம்பி வந்திடு ஓ மனிதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paara Siluvaiyilae Paran Yesu Uyir Kotutthaar Paasam Niraindhavaraay Paran Unnai Thaan Kaetkinraar Yesuvai Vittu Thooram Ponaay Indha Ulakatthai Pinbarri Ponaayo Avaridatthil Enna Aniyaayam Kantaay Sol Nanpanae Viyaathiyinaal Vandha Vaedhanaiyo Tholviyinaal Vandha Thuyaranggalo Endha Nilaiyil Nee Irunthaalum Sondha Makanaaga Maarrituvaar Kaayanggal Unakkaay Ataindhavarae Kanneer Unakkaay Vatitthavarae Kalvaariyil Uyir Kotutthavarae Karam Neetti Azhaikkiraar Oti Nee Vaa Sondha Makanenru Paaraamal Avaraiyae Unakkaay Kotutthittavar Ethai Unakku Inru Tharamaattaar Nampi Vanthitu O Manithaa