பாடல் #35847
பாவம் போக்கும் ஜீவ தேவன்
🔤 Paavam Pokkum Jeeva Devan
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவம் போக்கும் ஜீவ தேவன் அன்புடன் அழைக்கிறார் வந்திடாயோ 1. சிலுவையில் சிந்தினார் இயேசு ராஜன் தூய இரத்தம் உன்னை மீட்டிடவே உன் பாவம் சிவப்பாய் இருந்தாலும் வெண்மையாய் மாற்றுவார் வந்திடாயோ 2. பாவம் செய்யும் ஆத்துமா சாகுமன்றோ பாவத்தின் சம்பளம் மரணமன்றோ லோக இன்பம் மாயை அதை நம்பாதே லோத்தின் மனைவியை போல் மாறி பாதே -பாவம் 3. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நேச கரம் காட்டி அழைக்கிறார் வா நிம்மதி இழந்து தவிக்கும் உன்னை நித்திய மோட்சத்தில் சேர்த்திடுவார் 4. சந்தோஷம் சமாதானம் நிறைந்த வாழ்க்கை சத்திய பரன் இன்று தந்திடுவார் சஞ்சலத்தால் இன்னும் தவித்திடாதே சாந்த சொரூபி அழைக்கிறார் வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavam Pokkum Jeeva Devan Anpudan Azhaikkiraar Vanthitaayo 1. Siluvaiyil Sinthinaar Yesu Raajan Thooya Rattham Unnai Meettidavae Un Paavam Sivappaay Irunthaalum Venmaiyaay Maarruvaar Vanthitaayo 2. Paavam Seyyum Aatthumaa Saakumanro Paavatthin Sambalam Maranamanro Loga Inbam Maayai Athai Nampaathae Lotthin Manaiviyai Pol Maari Paathae -paavam 3. Naerrum Inrum Enrum Maaraadhavar Naesa Karam Kaatti Azhaikkiraar Vaa Nimmathi Izhanthu Thavikkum Unnai Nitthiya Motsatthil Saertthituvaar 4. Santhosham Samaathaanam Niraindha Vaazhkkai Satthiya Paran Inru Thanthituvaar Sanjjalatthaal Innum Thavitthitaathae Saandha Soroopi Azhaikkiraar Vaa