பாடல் #35845
இயேசுவின் அன்பை மறந்து
🔤 Yesuvin Anpai Maranthu
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் அன்பை மறந்து எங்கே நீ ஓடுகிறாய் வானத்திலே கூடு கட்டினாலும் பாதாளத்தில் படுக்கை போட்டாலுமே பரன் இயேசு உன்னை விடார் 1. பரிசுத்தம் இழந்தாய் பாவத்தாலே பாவத்தின் சம்பளம் மரணம் தானே நேசரின் அன்பை கண்ட பின்னும் நாசத்தை நோக்கி நீ ஓடிடாதே 2. நிந்தை அவமானம் நிர்வாணமும் சஞ்சலம் தவிப்பு சந்தோஷம் இல்லை தோல்வி ஏமாற்றம் உன் வாழ்விலே ஆதாமின் நிலைமை நீ அடைந்ததாலே 3. கஷ்டங்கள் கண்டு கலங்கிடாதே துன்பங்கள் நினைத்து சோர்ந்திடாதே நிரந்தரமான நிம்மதியை கல்வாரி நேசர் தந்திடுவார் 4. நித்திய பேரின்ப வாழ்வை தர நித்திய ஜீவன் உனக்களிக்க நீதியின் தேவன் இயேசு ராஜன் சிலுவையில் மாண்டனரே 5. பரிகாரி அவரே உன் பாவம் போக்க பாரினில் வேறு வழி இல்லையே அந்த காரம் உன்னை சூழ்ந்ததாலே அன்பின் தேவனை விட்டோடுகிறாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Anpai Maranthu Engkae Nee Otukiraay Vaanatthilae Kootu Kattinaalum Paathaalatthil Patukkai Pottaalumae Paran Yesu Unnai Vitaar 1. Parisuttham Izhanthaay Paavatthaalae Paavatthin Sambalam Maranam Thaanae Naesarin Anpai Kanda Pinnum Naasatthai Nokki Nee Otitaathae 2. Ninthai Avamaanam Nirvaanamum Sanjjalam Thavippu Santhosham Illai Tholvi Aemaartram Un Vaazhvilae Aathaamin Nilaimai Nee Ataindhathaalae 3. Kashtanggal Kantu Kalangkitaathae Thunbanggal Ninaitthu Sornthitaathae Nirandharamaana Nimmathiyai Kalvaari Naesar Thanthituvaar 4. Nitthiya Paerinba Vaazhvai Thara Nitthiya Jeevan Unakkalikka Neethiyin Devan Yesu Raajan Siluvaiyil Maandanarae 5. Parikaari Avarae Un Paavam Pokka Paarinil Vaeru Vazhi Illaiyae Andha Kaaram Unnai Soozhndhathaalae Anpin Devanai Vittotukiraay