பாடல் #3584
மறவாதே மனமே
🔤 Maravaathae Manamae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறவாதே, மனமே, - தேவ சுதனை மறவாதே, மனமே, - ஒருபொழுதும். 1.திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து, அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை - மறவாதே 2.விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு மண்ணில் ஏழையாக வந்த மானுவேலை - மறவாதே 3.கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ, மட்டில்லாத பரன் மானிடனான தயவை - மறவாதே 4.நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அளித்திவ் வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும் - மறவாதே 5.நித்தம் நித்தம் செய்த நிந்தனை பாவங்கள் அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை - மறவாதே 6.வருஷம், வருஷம் தோறும் மாறாத் தமதிரக்கம் பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை - மறவாதே 7. வல்ல பரம சுதன் மாட்டுக் கொட்டிலுக்குள் புல்லின் மேற் பிறந்த புதுமை தனை யெந்நாளும் 8.கந்தைத் துணியால் சுற்றி கடவுள் முன் னணைக்குள் நிந்தையாக வைக்கப்பட்ட நிலமை தன்னை 9. அடிமை வேடம் கொண்டனாதிக்கும் நரர்க்கும் நடுவில் நின்ற யேசு ராச நேசந்தன்னை 10. தேவ கோபம் நடுத் தீர்வை சாபம் நித்திய சாவு நரகத்தையும் தவிர்த்த கிறிஸ்து வேந்தை 11. ஆவலாகப் பேயின் அடிமைத் தனத்தினின்று பாவிகளை ரட்சிக்கப் பரம சுதன் வந்ததை 12. காவில் மனுடர் செய்தகன் மவினையை நீக்கிச் சீவனளிக்க வந்த தேவ பாலகனை 13. அன்னை வயிற்றி லுருவாக அமைத்துக் கர்த்தன் பின்னும் பின்னு முனைப் பேணிச் செய்த தயவை 14. ஆன பொரு ளனைத்தும் அமைத்துக் காத்தருளும் வான ராசன் மண்ணில் வந்த சினேகிதத்தை 15. கெட்ட பாவியுனைக் கிறிஸ்து மீட்டுக் கொண்ட மட்டில் லாத் தயவை மரண மரண மட்டும் 16. தன் மையான வேத நாயகன் றமிழ்க்கு நன்மை தருகும் ஏசு நாதர் திரு முகத்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maravaathae, Manamae, - Thaeva Sudhanai Maravaathae, Manamae, - Orupozhuthum. 1.thiramathaaga Unaith Thaetip Puviyil Vanthu, Aramathaagach Seytha Aathi Sudhan Thayavai - Maravaathae 2.vinnin Vaazhvum Adhan Maenmai Anaitthum Vittu Mannil Aezhaiyaaga Vandha Maanuvaelai - Maravaathae 3.ketta Maandhar Pinnum Kirupai Perru Vaazha, Mattillaadha Paran Maanidanaana Thayavai - Maravaathae 4.neenda Theemai Yaavum Neekkich Sugam Alitthiv Vaantu Muzhuthum Kaattha Aandavanai Ennaalum - Maravaathae 5.nittham Nittham Seytha Nindhanai Paavanggal Atthanaiyum Poruttha Arumai Ratsakanai - Maravaathae 6.varusham, Varusham Thorum Maaraath Thamathirakkam Perugap Perugach Seyyum Pithaavin Anukrakatthai - Maravaathae 7. Valla Parama Sudhan Maattuk Kottilukkul Pullin Maer Pirandha Puthumai Thanai Yennaalum 8.kanthaith Thuniyaal Surri Katavul Mun Nanaikkul Ninthaiyaaga Vaikkappatta Nilamai Thannai 9. Atimai Vaedam Kondanaathikkum Nararkkum Natuvil Nindra Yaesu Raasa Naesandhannai 10. Thaeva Kobam Natuth Theervai Saabam Nitthiya Saavu Narakatthaiyum Thavirttha Kiristhu Vaenthai 11. Aavalaagap Paeyin Atimaith Thanatthininru Paavigalai Ratsikkap Parama Sudhan Vandhathai 12. Kaavil Manudar Seythakan Mavinaiyai Neekkich Seevanalikka Vandha Thaeva Paalakanai 13. Annai Vayirri Luruvaaga Amaitthuk Kartthan Pinnum Pinnu Munaip Paenich Seytha Thayavai 14. Aana Poru Lanaitthum Amaitthuk Kaattharulum Vaana Raasan Mannil Vandha Sinaekidhatthai 15. Ketta Paaviyunaik Kiristhu Meettuk Konda Mattil Laath Thayavai Marana Marana Mattum 16. Than Maiyaana Vaedha Naayakan Ramizhkku Nanmai Tharukum Aesu Naadhar Thiru Mugatthai