பாடல் #35837
ஆயிரம் நாவுகள் போதாது
🔤 Aayiram Naavugal Pothaathu
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரம் நாவுகள் போதாது ஆண்டவா உம் அன்பை பாடிட பதினாயிரம் நாவுகள் போதாது பரமனே உம் புகழ் பாடிட உளையான சேற்றில் அமிழ்ந்து விட்டேன் பயங்கர குழியில் விழுந்து விட்டேன் பாசத்துடனே தூக்கி எடுத்து கன்மலையின் மேல் நிறுத்தினீரே எருசலேமை விட்டு எரிகோ சென்றேன் கள்ளர் கையில் சிக்கி காயப்பட்டேன் நல்ல சமாரியன் நாடி வந்து காயங்கள் ஆற்றி தேற்றினீரே விலையின்றி நானும் விற்கப்பட்டேன் விலையின்றி நீரென்னை மீட்டுக் கொண்டு விந்தை கிறிஸ்தேசு ராஜனே எந்தன் சிந்தை கவர்ந்தவரே ஆகாத மகன் பிரிந்து சென்றேன் அப்பா உம் ஆஸ்தியை அழித்து விட்டேன் ஆனாலும் எந்தன் மேல் அன்பு வைத்து அடைக்கலம் தந்து அணைத்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayiram Naavugal Pothaathu Aandavaa Um Anpai Paatida Pathinaayiram Naavugal Pothaathu Paramanae Um Pugazh Paatida Ulaiyaana Saerril Amizhnthu Vittaen Payanggara Kuzhiyil Vizhunthu Vittaen Paasatthudanae Thookki Etutthu Kanmalaiyin Mael Nirutthineerae Erusalaemai Vittu Eriko Senraen Kallar Kaiyil Sikki Kaayappattaen Nalla Samaariyan Naati Vanthu Kaayanggal Aarri Thaerrineerae Vilaiyinri Naanum Virkappattaen Vilaiyinri Neerennai Meettuk Kontu Vinthai Kiristhaesu Raajanae Endhan Sinthai Kavarndhavarae Aakaadha Makan Pirinthu Senraen Appaa Um Aasthiyai Azhitthu Vittaen Aanaalum Endhan Mael Anpu Vaitthu Ataikkalam Thanthu Anaitthavarae