பாடல் #35817
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
🔤 Ennai Pelappatutthum Kiristhuvinaal
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் எதையும் செய்வேன் (நான்) இயேசுவே என் வழி இயேசுவே என் சத்தியம் இயேசுவே என் ஜீவன் இயேசுவே என் பெலன் கிறிஸ்து என்னில் வந்ததினாலே கிருபையின் மேல் கிருபை பெற்றேனே கிறிஸ்து என்னில் வாழ்வதினாலே அந்த கிருபையிலே வளர்கின்றன ஆவியில் தொடங்கின ஓட்டம் ஆவியிலே முடித்திடுவேனே கிறிஸ்துவுக்குள் வாழ்வதினாலே வளமான வாழ்வைக் கண்டேனே இயேசுவுக்குள் வேர்கொண்டவனாய் இயேசுவின் மேல் கட்டப்பட்டவனாய் இயேசுவுக்குள் நடந்துக் கொண்டுமே விசுவாசித்திலே வளர்ந்திடுவேனே வாழ்ந்திருக்க எனக்கு தெரியுமே வாழ்ந்திருக்க எனக்கு தெரியுமே எந்த நிலையில் நான் இருந்தாலும் மனரம்மியமாய் வாழ்ந்திடுவேனே கிறிஸ்துவுக்குள் மரித்துவிட்டேனே தேவனுக்குள் மறைந்து கொண்டேனே ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில் மகிமையிலே வெளிப்படுவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Pelappatutthum Kiristhuvinaal Ethaiyum Seyvaen (naan) Yesuvae En Vazhi Yesuvae En Satthiyam Yesuvae En Jeevan Yesuvae En Pelan Kiristhu Ennil Vandhathinaalae Kirupaiyin Mael Kirupai Perraenae Kiristhu Ennil Vaazhvathinaalae Andha Kirupaiyilae Valarkindrana Aaviyil Thodangkina Ottam Aaviyilae Mutitthituvaenae Kiristhuvukkul Vaazhvathinaalae Valamaana Vaazhvaik Kantaenae Yesuvukkul Vaerkondavanaay Yesuvin Mael Kattappattavanaay Yesuvukkul Natanthuk Kontumae Visuvaasitthilae Valarnthituvaenae Vaazhnthirukka Enakku Theriyumae Vaazhnthirukka Enakku Theriyumae Endha Nilaiyil Naan Irunthaalum Manarammiyamaay Vaazhnthituvaenae Kiristhuvukkul Maritthuvittaenae Devanukkul Marainthu Kontaenae Jeevan Kiristhu Velippatum Naalil Makimaiyilae Velippatuvaenae