பாடல் #3581
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்
🔤 Maritthor Evarum Uyirtthezhuvaar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார், வானெக்காளத் தொனி முழங்க. எரி புகை மேக ரத மேறி ஏசு மகா ராஜன் வருங்கால். 1. தூதர் மின் னாற்றிசை துலங்க, ஜோதி வான் பறை இடி முழங்க, பாதகர் நெஞ்சம் நடுநடுங்க, பரிசுத் தோர் திரள் மனதிலங்க. 2. வானம் புவியும் வையகமும் மட மட வென்று நிலை பெயர, ஆன பொருளெல்லாம் அகன் றோட, அவரவர் தம் தம் வரிசையிலே. 3. அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர் அழியா மேனியை அணிந்திடுவார்; எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர் என்றும் வாழும் ஜோதிகளாய். 4.சமுத்திரம் தன்னில் விழுந்தோரை தரை தீ தாமும் தின்றோரைச் சமூலம் தந்தது ஷணப்பொழுதில் சருவேசர் நடுத் தீர்வைக்கென்றே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maritthor Evarum Uyirtthezhuvaar, Vaanekkaalath Thoni Muzhangga. Eri Pukai Maega Ratha Maeri Aesu Makaa Raajan Varungkaal. 1. Thoodhar Min Naarrisai Thulangga, Jothi Vaan Parai Iti Muzhangga, Paadhakar Nenjjam Natunatungga, Parisuth Thor Thiral Manathilangga. 2. Vaanam Puviyum Vaiyakamum Mata Mata Venru Nilai Peyara, Aana Porulellaam Agan Roda, Avaravar Tham Tham Varisaiyilae. 3. Azhivul Loraay Vithaikkappattor Azhiyaa Maeniyai Aninthituvaar; Eliya Roobamaay Vithaikkappattor Enrum Vaazhum Jothigalaay. 4.samutthiram Thannil Vizhunthorai Tharai Thee Thaamum Thinroraich Samoolam Thandhathu Shanappozhuthil Saruvaesar Natuth Theervaikkenrae.