பாடல் #35800
உம்மைப் போலொரு தெய்வமில்லை
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
உம்மைப் போலொரு தெய்வமில்லை உம்மை உயர்த்திடுவேன் உம்மை தவிர தெய்வமில்லை உம்மை தொழுதிடுவேன் பாடுவேன் நன்றி பாடுவேன் பாடுவேன் என்றும் பாடுவேன் - அல்லேலுயா 1. பாடுவேன் பாடுவேன் பாடுவேன் அந்த தாவீதைப் போல நானும் பாடுவேன் ஆக்கினைகள் அகற்றி சத்துருவை விலக்கி என்னோட இருப்பவரே தீங்கின்றி காப்பவரே 2. ஆடுவேன் ஆடுவேன் ஆடுவேன் அந்த தாவீதைப் போல நானும் ஆடுவேன் தாய்ப்போல தேற்றி தாங்கி அணைத்து ஆறுதல் தருபவரே ஆனந்தம் தந்தவரே 3. துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் அந்த தாவீதை போல நானும் துதிப்பேன் பயங்கள் நீக்கி தைரியத்தை தந்து என்னோடே இருப்பவரே - விசுவாசம் தந்தவரே