பாடல் #35788
யாருண்டு யாருண்டு உம்மைபோல
🔤 Yaaruntu Yaaruntu Ummaipola
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாருண்டு யாருண்டு உம்மைபோல என்னையும் நேசித்திட - 2 இயேசு தேவா இயேசு தேவா என்னுள்ளம் பொங்கிடுதே உம் அன்பை நினைக்கையிலே அள்ளி அள்ளி அணைப்பதில் அன்னை நீங்க தூக்கி என்னை சுமப்பதில் தந்தை நீங்க வாரி வழங்குவதில் வள்ளல் நீங்க என்னை வாழ வைப்பதிலே மன்னன் நீங்க யாருண்டு அதிசயம் செய்வதில் உம்மை போல அகிலத்தில் யாருண்டு என் தேவனே தாலாட்டி மகிழ்வதில் உம்மைபோல தரணியில் யாருமில்லை என் நேசரே யாருண்டு பாவி என்னை பரலோகில் சேர்த்திடவே பரமனே உம் ஜீவன் தந்தீர் ஐயா பரிசுத்த இரத்தம் எனக்காய் சிந்தி பரிசுத்தமாய் என்னை மாற்றினீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaaruntu Yaaruntu Ummaipola Ennaiyum Naesitthida - 2 Yesu Thaevaa Yesu Thaevaa Ennullam Pongkituthae Um Anpai Ninaikkaiyilae Alli Alli Anaippathil Annai Neengga Thookki Ennai Sumappathil Thanthai Neengga Vaari Vazhangkuvathil Vallal Neengga Ennai Vaazha Vaippathilae Mannan Neengga Yaaruntu Athisayam Seyvathil Ummai Pola Akilatthil Yaaruntu En Devanae Thaalaatti Makizhvathil Ummaipola Tharaniyil Yaarumillai En Naesarae Yaaruntu Paavi Ennai Paralokil Saertthidavae Paramanae Um Jeevan Thantheer Aiyaa Parisuttha Rattham Enakkaay Sinthi Parisutthamaay Ennai Maarrineerae