பாடல் #35754
வானவர்கள் கூடிவந்து தோத்திரங்கள்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
தினதேந்தினத் தினதேந்தினத் தினதேந்தினத் தின்னா தெந்தேந்தினத் தெந்தேந்தினத் தெந்தேந்தினத் தினனா வானவர்கள் கூடிவந்து தோத்திரங்கள் படிப்பார் வன்மையுள்ள சித்தரெல்லா மருந்தவங்கள் பிடிப்பார் ஞானமுடன் முல்லை தலைவர்வந்து தொழுவார் நட்சேத்திரச் சாஸ்திரிகள் காணிக்கைகள் தருவார் தானதர்ம மேழைகட்கு யாவர்களும் கொடுப்பார் சண்டாளப் பாவமெல்லா மண்டாது தடுப்பார் ரீனமுள்ள பேய்க்கணங்கள் மயங்கியங்கே துடிப்பார் ரேகன்மனு வானவெல்லை யெங்கள் மலையம்மே. ஆதிமலை எங்களுக்கோ ஏதன் மலையம்மே ஆண்டவனார் ரெங்களைத்தா னமைத்த மலையம்மே நீதியென்ற நால்வரமுங் கொடுத்தமலையம்மே நித்தியமும் சாகாம னின்றமலையம்மே சாதனையாய்ப் பேய்பிறகு கெடுத்தமலையம்மே தற்பரனா ரெம்மையங்கே சபித்தமலையம்மே பேதகமாய் நாங்களதை விட்டதற் பின்னம்மே பெத்தலேக மெங்களுக்குப் பெரியமலையம்மே. எங்கள் குலம் ஞானமிகுங் குறவர்குலமம்மே யெங்களுக்குச் சரிகுலங்க ளெங்குமில்லையம்மே பின்குலத்திற் பெண்கள் கொடோம் பெண்களையும் கொள்வோம் பேசுதற்கு தெங்கள்குலம் ராசகுலமம்மே மங்களகஞ்சேர் தீட்சை பெற்றோர் கெங்கள் பெண்ணைக் கொடுப்போம் மாறாட்டக் காரருக்கு வீராப்பாய்திரிவோம் புங்கமுடன் கிறிஸ்தவர்க்கு மலைகளெல்லாங் கொடுப்போம் புகழ்பெறுபெத் லேகமெங்கள் புதுமை மலையம்மே