பாடல் #35750
மாதயவாக எங்களுக் காகப் பாடுபட்டார்
🔤 Maadhayavaaga Enggaluk Kaagap Paatubattaar
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாதயவாக எங்களுக் காகப் பாடுபட்டார் இத்தனையாய்-மேசையா-தேவ சுதன் 1.ஆதியதஞ் செய் பாதகத்தினால் அற்புத நீதர் கிருபை போதர் யேசு நாதர் 2. கடின மாகக் கொடிய யூதர் கட்டியே நடத்த மகா சடுத்தப் பாடு படுத்த 3. ஆகடியத்துடன் பிடித்துக் கட்டிச் சென்றாசாரி முன்பாகக் கொண்டு போகக் கொலையாக 4. அன்னாவுங் காய்பாவும் சங்கமும் யாவர்களுங் கேட்க யூதர் பார்க்க ஞாயந் தீர்க்க 5. காய்மகாரத்துடன் பொல்லாத சேவகன் கன்னத்திலே யடிக்க மிக வலிக்கத் துடி துடிக்க 6. முக்காடிட்டுத் தலையிலடித்து முந்தியடித்தவனார் சொலென மூர்க்கப் பொலாதவர் கேட்க 7. கோட்டி பண்ணி இராமுழுதும் பலகோரணி கொண்டாட்ட விளையாட்ட குற்றம் சாட்ட 8. வஞ்சகக்கார இரண்டு பொய் சாட்சிகள் வந்து சபையேற புலை கூறச் சங்கம் சீற 9. பத்தி சேர் பேதுரப் போஸ்தலன் சத்தியம் பண்ணி மறுதலிக்க மனம் சலிக்க சேவ லொலிக்க 10. தேசிகன் வஸ்திரம் கிழித்து மரணத் தீர்மானம் செய்ய மிக வைய்ய நரருய்ய 11. காய் பாவின் வீட்டிலிருந்து பிலாத்து முன் கட்டின கட்டோடே வருதாடு அதை நாடு 12. வேதநாயகன் பாடும் புலம்பல் மெத்த மன முருக சபை பெருக ஜெயம் வருக.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maadhayavaaga Enggaluk Kaagap Paatubattaar Itthanaiyaay-maesaiyaa-thaeva Sudhan 1.aathiyathanj Sey Paadhakatthinaal Arpudha Needhar Kirupai Podhar Yaesu Naadhar 2. Katina Maagak Kotiya Yoodhar Kattiyae Natattha Makaa Satutthap Paatu Patuttha 3. Aagatiyatthudan Pititthuk Kattich Senraasaari Munpaagak Kontu Pogak Kolaiyaaga 4. Annaavung Kaaypaavum Sanggamum Yaavarkalung Kaetka Yoodhar Paarkka Njaayan Theerkka 5. Kaaymakaaratthudan Pollaadha Saevakan Kannatthilae Yatikka Miga Valikkath Thuti Thutikka 6. Mukkaatittuth Thalaiyilatitthu Munthiyatitthavanaar Solena Moorkkap Polaadhavar Kaetka 7. Kotti Panni Iraamuzhuthum Palakorani Kontaatta Vilaiyaatta Kurtram Saatta 8. Vanjjakakkaara Irantu Poy Saatsigal Vanthu Sapaiyaera Pulai Koorach Sanggam Seera 9. Patthi Saer Paethurap Posthalan Satthiyam Panni Marudhalikka Manam Salikka Saeva Lolikka 10. Thaesigan Vasthiram Kizhitthu Maranath Theermaanam Seyya Miga Vaiyya Nararuyya 11. Kaay Paavin Veettilirunthu Pilaatthu Mun Kattina Kattotae Varuthaatu Athai Naatu 12. Vaedhanaayakan Paatum Pulambal Mettha Mana Muruga Sapai Peruga Jeyam Varuga.