பாடல் #35747
எங்கள் பரலோக நன்னாடு
🔤 Enggal Paraloga Nannaatu
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் பரலோக நன்னாடு பரன் இயேசுவின் பொன் வீடு தூதரோடு கூடி துதி கீதம் பாடி துயரின்றி வாழும் தூய நாடு கர்த்தர் இயேசு கிறிஸ்து அன்றி அங்கு கணக்கற்ற தெய்வங்கள் இருபதில்லை விக்ரக உருவ சிலை வணக்கம் அந்த விண்ணக தேசத்தில் நடப்பதில்லை இயேசுவின் திருநாம மகிமை ஒன்றே அங்கு எங்கெங்கும் ஓங்கி ஒலிக்கும் நாடு ஏழாம் நாளாம் ஓய்வு நாளில் இயேசுவை எல்லோரும் துதிக்கும் நாடு பெற்று வளர்த்த தாய் தந்தையை மதியா பிள்ளைக்கு அங்கு இடமில்லை பொய் கொலை களவு விபசாரம் செய்யும் புல்லர்கள் அங்கு செல்வதில்லை மாற்றான் மனைவியை இச்சிக்கும் மதிகெட்ட துர் மார்க்கர் அங்கு இருப்பதில்லை மாதேவன் இயேசு வகுத்திட்ட வழியில் வாழ்ந்திட்ட மனிதர்கள் வாழும் நாடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Paraloga Nannaatu Paran Yesuvin Pon Veetu Thoodharotu Kooti Thuthi Keedham Paati Thuyarinri Vaazhum Thooya Naatu Kartthar Yesu Kiristhu Anri Angku Kanakkartra Theyvanggal Irubathillai Vikraka Uruva Silai Vanakkam Andha Vinnaka Thaesatthil Natappathillai Yesuvin Thirunaama Makimai Onrae Angku Engkengkum Ongki Olikkum Naatu Aezhaam Naalaam Oyvu Naalil Yesuvai Ellorum Thuthikkum Naatu Perru Valarttha Thaay Thanthaiyai Mathiyaa Pillaikku Angku Idamillai Poy Kolai Kalavu Vibasaaram Seyyum Pullarkal Angku Selvathillai Maarraan Manaiviyai Ichsikkum Mathiketta Thur Maarkkar Angku Iruppathillai Maadevan Yesu Vakutthitta Vazhiyil Vaazhnthitta Manidharkal Vaazhum Naatu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G D A D D Am D Am D C G D D G D D G D A D G D D G D G D D G D A D G D D G