பாடல் #3573
மரண இருளில் இருந்த
🔤 Marana Irulil Irundha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மரண இருளில் இருந்த எமக்கு ஒளியைத் தந்தவர் யார்-இந்த மானிலத்தை ஜெயித்தெழுந்த இயேசு ஒருவர் தான் பாவச் சேற்றில் எம்மை மீட்டுத் தூக்கி எடுத்தவர் யார்-தூய இரத்தம் சிந்தி தூய்மை செய்த இயேசு ஒருவர் தான் தேவ சாயல் எமக்குத் தந்த தேவ மைந்தனும் யார்-இங்கு நாளும் நம்மை வழி நடத்தும் இயேசு ஒருவர் தான் மாய உலகில் வாழும் நமக்கு வாழ்வைத் தந்தவர் யார்-எங்கள் ஆயனாக இங்கு வந்த இயேசு ஒருவர் தான் திசைகள் மாறிச் சென்ற நமக்கு உதவி செய்தவர் யார்-என்றும் மேய்ப்பராகி வழியைக் காட்டும் இயேசு ஒருவர் தான் மனித வாழ்வின் நடை முறைக்கு வழி வகுத்தவர் யார்-எம்மை மனந்திருப்பி அணைத்துக் கொண்ட இயேசு ஒருவர் தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marana Irulil Irundha Emakku Oliyaith Thandhavar Yaar-indha Maanilatthai Jeyitthezhundha Yesu Oruvar Thaan Paavach Saerril Emmai Meettuth Thookki Etutthavar Yaar-thooya Rattham Sinthi Thooymai Seytha Yesu Oruvar Thaan Thaeva Saayal Emakkuth Thandha Thaeva Maindhanum Yaar-ingku Naalum Nammai Vazhi Natatthum Yesu Oruvar Thaan Maaya Ulakil Vaazhum Namakku Vaazhvaith Thandhavar Yaar-enggal Aayanaaga Ingku Vandha Yesu Oruvar Thaan Thisaigal Maarich Sendra Namakku Udhavi Seythavar Yaar-enrum Maeypparaaki Vazhiyaik Kaattum Yesu Oruvar Thaan Manidha Vaazhvin Natai Muraikku Vazhi Vakutthavar Yaar-emmai Mananthiruppi Anaitthuk Konda Yesu Oruvar Thaan