பாடல் #35720
ஐந்து காய வேதனை
🔤 Ainthu Kaaya Vaedhanai
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஐந்து காய வேதனை அன்பர் இயேசுவை வாட்டுதே ஆறாத சோகம் மாறாத துன்பம் ஆண்டவர் இயேசு மேல் சூழ்ந்ததேன் கற்றூணில் கட்டி கசையடிகள் அடித்தனரே தலையினிலே குத்தி அவர் கன்னத்தில் அறைந்தனரே சிவப்பங்கி உடுத்தி கையில் கோலினைக் கொடுத்தனரே யூத ராஜா என்று இகழ்ந்து முகத்தில் காறி உமிழ்ந்தனரே மன்னவர் இயேசு உடல் பெரும் புண்ணாகி நொந்ததுவே மாபெரும் இரத்த வெள்ளம் பெருகி ஆறாகி பாய்ந்ததுவே மானிடர் பாவம் தனை மா தேவன் சுமந்து தீர்த்தார் மறாவாதே நீ நெஞ்சமே மனம் திரும்பிடு அவர் தஞ்சமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ainthu Kaaya Vaedhanai Anbar Yesuvai Vaattuthae Aaraadha Sogam Maaraadha Thunbam Aandavar Yesu Mael Soozhndhathaen Karroonil Katti Kasaiyatigal Atitthanarae Thalaiyinilae Kutthi Avar Kannatthil Araindhanarae Sivappangki Ututthi Kaiyil Kolinaik Kotutthanarae Yoodha Raajaa Enru Igazhnthu Mugatthil Kaari Umizhndhanarae Mannavar Yesu Udal Perum Punnaaki Nondhathuvae Maaperum Rattha Vellam Peruki Aaraaki Paayndhathuvae Maanidar Paavam Thanai Maa Devan Sumanthu Theertthaar Maraavaathae Nee Nenjjamae Manam Thirumpitu Avar Thanjjamae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D Em Em B D Em Em Em B C D Em A D Em Em G G B Em