பாடல் #35683
பிறந்த பலனை
🔤 Pirandha Palanai
🎙 Evg. சீர்காழி யேசுபிரகாசம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிறந்த பலனை நீ அறிந்திட வேண்டுமென்றால் இறைவன் இயேசுவை தெரிந்துக்கொள்வாய் சிறந்த வாழ்வை நீ காண வேண்டுமென்றால் சிலுவையில் தொங்கிடும் இயேசுவை பார் நிரந்திரமில்லாத உலகத்தில் மன நிம்மதி காண ஒரு வழியுண்டு அது நானே வழியும் சத்தியமும் ஜீவனும் உரைத்திட்ட இயேசுவின் பதிலுண்டு உலகம் முழுவதும் நீ ஆதாயம் ஆக்கிக் கொண்டாலும் பயமென்ன விலைமதிப்பில்லா உன் ஆத்துமா அழிந்தால் உனக்கு உண்டாகும் இலாபமென்ன பல கலைகள் கற்று பெரும் புகழும் பெற்று பணத்தில் மிதந்தாலும் பலனென்ன அழிந்துடும் உலகில் அழியா மீட்பரை அறியாது வேறு வழியென்ன பக்தர்கள் முக்தர்கள் சித்தர்கள் அனைவரும் நித்திரை அடைந்தார் உலகறியும் இத்தரையில் பரிசுத்தராம் இயேசு மரித்துயிர் எழுந்தார் நாம் அறிவோம் சத்தியம் அறியா மாந்தர்கள் வாழும் இச்ஜகத்தினில் எங்கும் சென்றிடுவோம் நித்திய ஜீவன் அளித்திடும் இயேசு இரட்சகர் நற்செய்தி உரைத்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pirandha Palanai Nee Arinthida Vaentumenraal Iraivan Yesuvai Therinthukkolvaay Sirandha Vaazhvai Nee Kaana Vaentumenraal Siluvaiyil Thongkitum Yesuvai Paar Niranthiramillaadha Ulakatthil Mana Nimmathi Kaana Oru Vazhiyuntu Athu Naanae Vazhiyum Satthiyamum Jeevanum Uraitthitta Yesuvin Pathiluntu Ulakam Muzhuvathum Nee Aathaayam Aakkik Kontaalum Payamenna Vilaimathippillaa Un Aatthumaa Azhinthaal Unakku Untaakum Ilaabamenna Pala Kalaigal Karru Perum Pugazhum Perru Panatthil Midhanthaalum Palanenna Azhinthutum Ulakil Azhiyaa Meetparai Ariyaathu Vaeru Vazhiyenna Paktharkal Muktharkal Sittharkal Anaivarum Nitthirai Atainthaar Ulakariyum Ittharaiyil Parisuttharaam Yesu Maritthuyir Ezhunthaar Naam Arivom Satthiyam Ariyaa Maandharkal Vaazhum Ichjakatthinil Engkum Senrituvom Nitthiya Jeevan Alitthitum Yesu Iratsakar Narseythi Uraitthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Ab Ab Ab Ab Ab Ab Ab Ab Ab Ab Ab Ab Ab Ab Ab Ab Ab Ab Ab Ab Ab Ab Ab Ab