பாடல் #3565
மனுவா இத்தரையின் மீதி லென்தனை
🔤 Manuvaa Ittharaiyin Meethi Lenthanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மனுவா இத்தரையின் மீதி லென்தனை மீட்க வந்தவனே கன பக்தியுடனே நித்திய முனைப் போற்றிப் பாடிடுவேன். 2. அடியாரைக் காத்திடும் நீதி அம்பர ஜோதி என் குருவே! கன பாவியானுனையே துதித்திடப் பாக்கியந் தருவாய். 3. என தாதியே பரஞ்ஜோதியே எங்களாதிபன் துரையே வருவாய் நீ எந்தனைக் காத்திட உனை வாழ்த்தினேன் வருவாய். 4. எனை ஆண்டவா உயிர் மீண்டவா எனக்கார் துணை பரனே! துயர் நீங்கிடப் பாவம் போக்கிட உனை வேண்டினேன் வருவாய். 5. எனைத் தேடினால் வருவேன் என்றுரைத்த செல்வச் சீமானே! தினம் தேடும் அடியார் தமக்கருள் உய்த்திடும் உடனே. 6. உயரத்தனே பரிசுத்தனே எனதன்பின் சாகரனே! உனிலானந்தம் மிகப் பொங்கிட எமக்கன்பு செய் பரனே. 7. உயராதி மறையை நீதியாய் எமக்கோதி வைத்தவனே! உனதன்பின் கரத்தை நீட்டி எந்தனுக்காசி தந்திடுவாய்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Manuvaa Ittharaiyin Meethi Lenthanai Meetka Vandhavanae Kana Pakthiyudanae Nitthiya Munaip Porrip Paatituvaen. 2. Atiyaaraik Kaatthitum Neethi Ambara Jothi En Kuruvae! Kana Paaviyaanunaiyae Thuthitthidap Paakkiyan Tharuvaay. 3. Ena Thaathiyae Paranjjothiyae Enggalaathiban Thuraiyae Varuvaay Nee Endhanaik Kaatthida Unai Vaazhtthinaen Varuvaay. 4. Enai Aandavaa Uyir Meendavaa Enakkaar Thunai Paranae! Thuyar Neengkidap Paavam Pokkida Unai Vaentinaen Varuvaay. 5. Enaith Thaetinaal Varuvaen Enruraittha Selvach Seemaanae! Thinam Thaetum Atiyaar Thamakkarul Uytthitum Udanae. 6. Uyaratthanae Parisutthanae Enathanpin Saagaranae! Unilaanandham Migap Pongkida Emakkanpu Sey Paranae. 7. Uyaraathi Maraiyai Neethiyaay Emakkothi Vaitthavanae! Unathanpin Karatthai Neetti Endhanukkaasi Thanthituvaay.