பாடல் #3564
மனிதரை பிடிப்போனாய் வாழ்ந்திடுவாய்
🔤 Manidharai Pitipponaay Vaazhnthituvaay
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதரைப் பிடிப்போனாய் வாழ்ந்திடுவாய் - நீ மனிதரைப் பிடிப்போனாய் வாழ்ந்திடுவாய்! என்ற தேவ சப்தம் கேட்டு விழித்திடு இன்றே தேவ சித்தம் செய்யப் புறப்படு! அல்லேலூயா - 4 இரவு முழுவதும் பேதுரு பிரயாசப் பட்டும் பலனில்லை தேவ சப்தம் கேட்டு ஆழத்திலே போட்டு திரளான மீன்களைப் பிடித்துக் கொண்டான்! மீன்களைப் பிடித்த பேதுருவை மனிதரைப் பிடித்திட அழைத்திட்டார் எண்ணிறந்த மனிதர் விண் வாழ்வைக்காண எரிகின்ற மெழுகாய் வாழ்ந்திருந்தான்! உலகத்தை வெறுத்துத் துணிந்து வா உன்னத வேலையை உணர்ந்து வா! பாவத்தில் மாளும் மானிடரை மீட்க பரிவுடன் நீயும் வந்திடாயோ? பாவியாம் உன்னையும் மாற்றுவார் பரிசுத்தம் தந்து தேற்றுவார்! பாடுகளைத் தாங்கி சாட்சியாக வாழ்ந்து பரலோகில் சேர்ப்பாய் ஆத்துமாக்களை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidharaip Pitipponaay Vaazhnthituvaay - Nee Manidharaip Pitipponaay Vaazhnthituvaay! Endra Thaeva Saptham Kaettu Vizhitthitu Inrae Thaeva Sittham Seyyap Purappatu! Allaelooyaa - 4 Iravu Muzhuvathum Paethuru Pirayaasap Pattum Palanillai Thaeva Saptham Kaettu Aazhatthilae Pottu Thiralaana Meenkalaip Pititthuk Kontaan! Meenkalaip Pitittha Paethuruvai Manidharaip Pititthida Azhaitthittaar Ennirandha Manidhar Vin Vaazhvaikkaana Erikindra Mezhukaay Vaazhnthirunthaan! Ulakatthai Verutthuth Thuninthu Vaa Unnatha Vaelaiyai Unarnthu Vaa! Paavatthil Maalum Maanidarai Meetka Parivudan Neeyum Vanthitaayo? Paaviyaam Unnaiyum Maarruvaar Parisuttham Thanthu Thaerruvaar! Paatugalaith Thaangki Saatsiyaaga Vaazhnthu Paralokil Saerppaay Aatthumaakkalai