பாடல் #35634
ஆட்டு குட்டியானவரின்
🔤 Aattu Kuttiyaanavarin
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆட்டு குட்டியானவரின் கலியாணம் அதுக்கு இப்போ நீங்க தயாராகனும் மணவாளன் இயேசு தான் மணப்பொன்னு நாமதான் மேளதாளம் மேகத்திலே வானதூதர் காணத்திலே - ஆட்டு 1. ஏதேனிலே கலியாணம் எப்போ நடந்தது அது எப்படி நடந்தது இரகசியத்தை தெரிஞ்சிக்கொள்ள மனசு துடிக்குது என் மனசு துடிக்குது தனிமை தீமையென்ற தத்துவத்தை துவக்கி வெச்சு துணையுடன் சேர்ந்திருக்க இனிதாய் வாழ்ந்திருக்க மனைவி கரம் பிடிச்சி வாழ வெச்சாரு - சொந்த 2. கானாவூரு கல்யாணத்திலே என்ன நடந்தது அற்புதம் எப்படி நடந்தது - அந்த ஆறு ஜாடி தண்ணீர் எப்படி இரசமாச்சுது அது எப்படி ஆச்சுது மணம் நிறம் ருசியில்லாத வாழ்க்கையதான் மாற்றிடவே இதயம் திறந்தாலே இனிமை கூடிடுமே இயேசுவுடன் இணைந்தே நாம் வாழ்ந்தால் போதுமே - என்றும் 3. சொந்த இரத்தம் பரிசமாக சிந்தி கொடுத்தாரு குருசில் சிந்தி கொடுத்தாரு இரட்சகராம் இயேசு சாமி எனக்காய் வந்தாரு இங்கு எனக்காய் வந்தாரு இருமனம் ஒருமனமாய் வாழ்வதுதான் திருமணம் இறைவன் இதயத்தில் இடமெமக்களித்திடவே உடன்படிக்கை ஒன்று செஞ்சி வெச்சாரு - புது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aattu Kuttiyaanavarin Kaliyaanam Athukku Ippo Neengga Thayaaraaganum Manavaalan Yesu Thaan Manapponnu Naamathaan Maelathaalam Maegatthilae Vaanathoodhar Kaanatthilae - Aattu 1. Aethaenilae Kaliyaanam Eppo Natandhathu Athu Eppati Natandhathu Irakasiyatthai Therinjsikkolla Manasu Thutikkuthu En Manasu Thutikkuthu Thanimai Theemaiyendra Thatthuvatthai Thuvakki Vechsu Thunaiyudan Saernthirukka Inithaay Vaazhnthirukka Manaivi Karam Pitichsi Vaazha Vechsaaru - Sondha 2. Kaanaavooru Kalyaanatthilae Enna Natandhathu Arpudham Eppati Natandhathu - Andha Aaru Jaati Thanneer Eppati Irasamaachsuthu Athu Eppati Aachsuthu Manam Niram Rusiyillaadha Vaazhkkaiyathaan Maarridavae Idhayam Thiranthaalae Inimai Kootitumae Yesuvudan Inainthae Naam Vaazhnthaal Pothumae - Enrum 3. Sondha Rattham Parisamaaga Sinthi Kotutthaaru Kurusil Sinthi Kotutthaaru Iratsakaraam Yesu Saami Enakkaay Vanthaaru Ingku Enakkaay Vanthaaru Irumanam Orumanamaay Vaazhvathuthaan Thirumanam Iraivan Idhayatthil Idamemakkalitthidavae Udanbatikkai Onru Senjsi Vechsaaru - Puthu