பாடல் #35632
இயேசு என்னும் நாமம் இணையில்லா
🔤 Yesu Ennum Naamam Inaiyillaa
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என்னும் நாமம் இணையில்லா நாமம் காசினி மீதிலொரு மாசிலா நாமம் 1. கல்விக் கண்ணை திறந்து கற்றறிய நூலும் தந்து நன்னிய நாகரீகம் நன்னெறிகள் சொல்லித் தந்து நானிலம் மீது நம்ம நாடு தலை நிமிர்ந்து நிற்க செய்தது எங்கள் இயேசுவின் நாமம் 2. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு என்று சொன்ன அடிமை தளையுடைத்து பெண்ணுக்கும் உரிமை தந்து செத்தவன் பிணத்துடனே செந்தீயில் தள்ளி எரித்த உடன்கட்டை உடைத்ததெங்கள் இயேசுவின் நாமம் 3. தாயத்து மந்திரங்கள் பாம்பாட்டி மாய வித்தை கண் கட்டி குட்டி சாத்தான் இரத்தம் கக்கிச் சாவாய் என்று ஏமாற்றி உந்தன் பையில் எஞ்சிய பொருள் பறித்த கூட்டம் விரட்டியது இயேசுவின் நாமம் 4. பள்ளன் பறையன் என பாதகர் வகுத்த விதி சூத்திரன் சண்டாளன் என்று சாத்திரங்கள் செய்த சதி தொட்டாலே தீட்டு ஐயோ பட்டாலே பாவம் என்று பூட்டிய விலங்கொடித்த இயேசுவின் நாமம் 5. வந்தாரை வாழவைக்கும் செந்தமிழ்/இந்திய திருச்சபையே மந்தாரைப் பூவைப்போல உந்தன் மனம் மாறலையே நின்றால் நிமிர்ந்தாலும் இயேசு துரை நம் துணையே உள்ளதை சொல்லிபோட்டேன் வியாசர் எந்தன் பாட்டினிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Ennum Naamam Inaiyillaa Naamam Kaasini Meethiloru Maasilaa Naamam 1. Kalvik Kannai Thiranthu Kartrariya Noolum Thanthu Nanniya Naagareegam Nannerigal Sollith Thanthu Naanilam Meethu Namma Naatu Thalai Nimirnthu Nirka Seythathu Enggal Yesuvin Naamam 2. Atuppoothum Penkalukku Patippatherku Enru Sonna Atimai Thalaiyutaitthu Pennukkum Urimai Thanthu Setthavan Pinatthudanae Sentheeyil Thalli Erittha Udankattai Utaitthathenggal Yesuvin Naamam 3. Thaayatthu Manthiranggal Paampaatti Maaya Vitthai Kan Katti Kutti Saatthaan Rattham Kakkich Saavaay Enru Aemaarri Undhan Paiyil Enjsiya Porul Parittha Koottam Virattiyathu Yesuvin Naamam 4. Pallan Paraiyan Ena Paadhakar Vakuttha Vithi Sootthiran Santaalan Enru Saatthiranggal Seytha Sathi Thottaalae Theettu Aiyo Pattaalae Paavam Enru Poottiya Vilangkotittha Yesuvin Naamam 5. Vanthaarai Vaazhavaikkum Sendhamizh/inthiya Thirucchapaiyae Manthaaraip Poovaippola Undhan Manam Maaralaiyae Ninraal Nimirnthaalum Yesu Thurai Nam Thunaiyae Ullathai Sollipottaen Viyaasar Endhan Paattinilae