பாடல் #35631
இயேசு என்றாலே தேனும் தினைமாவும்
🔤 Yesu Enraalae Thaenum Thinaimaavum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என்றாலே தேனும் தினைமாவும் நாவினில் இனிப்பதில்லை இகமெங்கும் இயேசுவின் புகழினை நான் பாட உடலும் உள்ளமும் களைப்பதில்லை நாசியிலே சுவாசம் தந்தவரைப் பாட வேதமும் கீதமும் இணைந்த என் பாடலில் நாதம் குறைவதில்லை சஞ்சலங்கள் தீர்க்கும் தலைவா சரணம் அஞ்சலென்றருள்வாய் இறைவா சரணம் சரணம் 1. பெருங்கடல் நடுவில் கடும்புயல் நேரம் படகிலும் இருப்பார் கடலிலும் நடப்பார் ஒரு விரல் நீட்டி காற்றும் கடலும் அமரச்செய்வார் - நான் சாற்றிடும் துதிகள் ஏற்றிடவே - மனம் இரங்கித் தம் கிருபை ஊற்றிடுவார் - இயேசு 2. வறண்ட வனாந்திரம் வானத்தை திறப்பார் வானவர் தானியம் காடையும் தருவார் மரக்கிளை வீசி மாராவின் கசந்த நீர் மதுரமாய் மாற்றிடுவேன் - நான் நெடுந்தொலை நடக்க நிழல் தரும்மேகமாய் நெடும்பகை அணு காதிடை வந்து தடுப்பார் - இயேசு 3. மிகு கனி கொடுக்கும் கொடியென இலங்க தகுதியெனில் விளங்க தூய்மையுமளிப்பார் தமயனாய் மாற்றி தமக்கென யான் பிழைக்க தருவினிலுயர் கொடுத்தார் - இந்த இகத்தினிலிவர் புகழ் இனிதாய் பாடிட எனக்கொரு வரமருள் புரிந்தெனை காப்பார் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Enraalae Thaenum Thinaimaavum Naavinil Inippathillai Igamengkum Yesuvin Pugazhinai Naan Paada Udalum Ullamum Kalaippathillai Naasiyilae Suvaasam Thandhavaraip Paada Vaedhamum Keedhamum Inaindha En Paadalil Naadham Kuraivathillai Sanjjalanggal Theerkkum Thalaivaa Saranam Anjjalendrarulvaay Iraivaa Saranam Saranam 1. Perunggatal Natuvil Katumpuyal Naeram Patakilum Iruppaar Katalilum Natappaar Oru Viral Neetti Kaarrum Katalum Amarachseyvaar - Naan Saarritum Thuthigal Aerridavae - Manam Irangkith Tham Kirupai Oorrituvaar - Yesu 2. Varanda Vanaanthiram Vaanatthai Thirappaar Vaanavar Thaaniyam Kaataiyum Tharuvaar Marakkilai Veesi Maaraavin Kasandha Neer Mathuramaay Maarrituvaen - Naan Netuntholai Natakka Nizhal Tharummaegamaay Netumbakai Anu Kaathitai Vanthu Thatuppaar - Yesu 3. Miku Kani Kotukkum Kotiyena Ilangga Thakuthiyenil Vilangga Thooymaiyumalippaar Thamayanaay Maarri Thamakkena Yaan Pizhaikka Tharuviniluyar Kotutthaar - Indha Igatthinilivar Pugazh Inithaay Paatida Enakkoru Varamarul Purinthenai Kaappaar - Yesu