பாடல் #35629
ஆடையணிந்த சிலை
🔤 Aataiyanindha Silai
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆடையணிந்த சிலை அசைந்திடுமோ மாலையணிந்த படம் மணம் தரும் கிழக்கில் தோன்றுகின்ற காலை சூரியன் மேற்கில் உதித்து வருமோ - திரும்பவும் மாய உலகமிது மாய மனிதர்கள் வாழும் புவனமிதுதான் - பொய் பேசி பழகி அதில் ஊறி திளைத்துவிட்ட தீய மனிதர் இவர்தான் - கொடிய 1. நதிகள் சேர்ந்து நீல கடலில் சேர்ந்தாலும் சமுத்திரம் நிரம்பிடுமோ வடக்கு நோக்கி தென்றல் சுழன்று அடித்தாலும் திரும்பாமல் இருந்திடுமா காற்று சூரியன் கடலின் அலைகளும் தானாக இயங்கிடுமோ - அவர் படைத்த படைப்புகளும் படைத்தவர் வாக்கினை மீறி தவறிவிடுமோ - என்றும் 2. சேவல் கூவி காலை பொழுது விடியுமோ கதிரவன் எழும்பிடுமோ - பல கோடி கோடியாய் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் இருண்டிடுமோ கடின பாறைகள் சிறிய விதையொன்றின் வேரினை தடுத்திடுமோ - ஒரு சொல்லை அவர் உரைக்க அண்டசராசரம் அடங்காமல் இருந்திடுமோ - அவர் சொல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aataiyanindha Silai Asainthitumo Maalaiyanindha Patam Manam Tharum Kizhakkil Thonrukindra Kaalai Sooriyan Maerkil Uthitthu Varumo - Thirumbavum Maaya Ulakamithu Maaya Manidharkal Vaazhum Puvanamithuthaan - Poy Paesi Pazhaki Athil Oori Thilaitthuvitta Theeya Manidhar Ivarthaan - Kotiya 1. Nathigal Saernthu Neela Katalil Saernthaalum Samutthiram Nirampitumo Vatakku Nokki Thendral Suzhanru Atitthaalum Thirumpaamal Irunthitumaa Kaarru Sooriyan Katalin Alaigalum Thaanaaga Iyangkitumo - Avar Pataittha Pataippugalum Pataitthavar Vaakkinai Meeri Thavarivitumo - Enrum 2. Saeval Koovi Kaalai Pozhuthu Vitiyumo Kathiravan Ezhumpitumo - Pala Koti Kotiyaay Karanggal Maraitthaalum Aadhavan Iruntitumo Katina Paaraigal Siriya Vithaiyonrin Vaerinai Thatutthitumo - Oru Sollai Avar Uraikka Andasaraasaram Adangkaamal Irunthitumo - Avar Sol