பாடல் #35627
சிந்திப்போம் சிந்திப்போம்
🔤 Sinthippom Sinthippom
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிந்திப்போம் சிந்திப்போம் செயல்படுவோம் உழைப்போம் உழைப்போம் உயர்ந்திடுவோம் இனி காலம் செல்லாது இந்த உலகம் நிலைக்காது 1. துணிவிருந்தால் தேன் கூடுகளும் மனிதர்க்கு அரண்மனைதான் மனமிருந்தால் மைனாவின் கூடுகளும் புள்ளிமானுக்கும் புகலிடம்தான் - நீ முதலடி எடுத்தால் வலகரம் பிடிப்பார் வழுவாமல் காத்திடுவார் - பெருங் கடல் மேல் நடந்து அலைகளை மிதிப்போம் அவரென்று துணையிருப்பார் - சிந்திப்போம் 2. கடுகளவேனும் விசுவாசம் இருந்தால் மலைகளை புரட்டிடலாம் - மன கண்களைத் திறந்தால் மாராவின் கசப்பு மதுரமாய் மாற்றிடலாம் - கொஞ்சம் தைரியம் இருந்தால் கூழாங்கல் போதும் எதிரியை வீழ்த்திடலாம் - நம் சேனையின் தேவன் கூட இருக்கிறார் ஜெய கொடி ஏற்றிடலாம் - சிந்திப்போம் 3. வானமும் பூமியும் ஒழிந்தே போகும் ஒழியாதவர் வசனம் - என்றும் அவரது வசனம் அதிசயம் செய்யும் அதற்கே அடிபணிவோம் - அவர் இங்கே இருக்கிறார் இங்கே இருக்கிறார் என்போரை புறக்கணிப்போம் மண வாளனும் கீழ் வானில் தோன்றிடும் நாளும் நெருங்குது விழித்திருப்போம் சிந்திப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinthippom Sinthippom Seyalpatuvom Uzhaippom Uzhaippom Uyarnthituvom Ini Kaalam Sellaathu Indha Ulakam Nilaikkaathu 1. Thunivirunthaal Thaen Kootugalum Manidharkku Aranmanaithaan Manamirunthaal Mainaavin Kootugalum Pullimaanukkum Pugalidamthaan - Nee Mudhalati Etutthaal Valakaram Pitippaar Vazhuvaamal Kaatthituvaar - Perung Katal Mael Natanthu Alaigalai Mithippom Avarenru Thunaiyiruppaar - Sinthippom 2. Katugalavaenum Visuvaasam Irunthaal Malaigalai Purattidalaam - Mana Kankalaith Thiranthaal Maaraavin Kasappu Mathuramaay Maarridalaam - Konjjam Thairiyam Irunthaal Koozhaanggal Pothum Ethiriyai Veezhtthidalaam - Nam Saenaiyin Devan Kooda Irukkiraar Jeya Koti Aerridalaam - Sinthippom 3. Vaanamum Poomiyum Ozhinthae Pokum Ozhiyaadhavar Vasanam - Enrum Avarathu Vasanam Athisayam Seyyum Adharkae Atibanivom - Avar Ingkae Irukkiraar Ingkae Irukkiraar Enporai Purakkanippom Mana Vaalanum Keezh Vaanil Thonritum Naalum Nerungkuthu Vizhitthiruppom Sinthippom