பாடல் #35626
எனது கால்கள் சறுக்கும்போது
🔤 Enathu Kaalkal Sarukkumpothu
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனது கால்கள் சறுக்கும்போது உமது கிருபை தாங்குதே உலகம் என்னை வெறுக்கும்போது உமது அன்பெனில் பெருகுதே தமது கிருபை தீயன் நானிங்கு தளரும் போதென்னில் நிறையுதே 1. இருண்ட காலம் உம்மை நோக்கி அபயம் என்றே கூப்பிட்டேன் இக்கட்டுகளுக்கு நீங்கலாக்கி இரட்சிக்க கரங்களை நீட்டினீர் அந்தகாரம் மரண இருள் கட்டுகள் அறுத்து விடுவித்தீர் அதிசயம் ஆ உமது கிருபை நிமித்தம் உம்மை துதிக்கிறேன் 2. தவனமுள்ள ஆத்துமாவை திருப்தியாக்கி நடத்துவீர் பசித்த உள்ளம் நன்மையாலே நிரம்பி வழிந்திட செய்கிறீர் வெண்கல கதவுகள் உடைந்திடும் இருப்பு தாழ்கள் முறிந்திடும் வசனம் அனுப்பி அழிவை விலக்கி தேசம் செழிப்பாய் மாற்றுவீர் 3. எளியன் எந்தன் சிறுமை மாற்றி உயர்ந்த அடைக்கலம் அமர்த்தினீர் நியாயகேடு வாயைமூட உத்தமர் அதை கண்டு மகிழுவார் நடக்கும் வழியை வெளிச்சமாக்கி செம்மை பாதையில் நடந்திட எனக்கும் கிருபை தந்த தேவா ஓடி முடித்திட அருளுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enathu Kaalkal Sarukkumpothu Umathu Kirupai Thaangkuthae Ulakam Ennai Verukkumpothu Umathu Anpenil Perukuthae Thamathu Kirupai Theeyan Naaningku Thalarum Pothennil Niraiyuthae 1. Irunda Kaalam Ummai Nokki Abayam Enrae Kooppittaen Ikkattugalukku Neenggalaakki Iratsikka Karanggalai Neettineer Andhakaaram Marana Irul Kattugal Arutthu Vituvittheer Athisayam Aa Umathu Kirupai Nimittham Ummai Thuthikkiraen 2. Thavanamulla Aatthumaavai Thirupthiyaakki Natatthuveer Pasittha Ullam Nanmaiyaalae Nirampi Vazhinthida Seykireer Venkala Kathavugal Utainthitum Iruppu Thaazhkal Murinthitum Vasanam Anuppi Azhivai Vilakki Thaesam Sezhippaay Maarruveer 3. Eliyan Endhan Sirumai Maarri Uyarndha Ataikkalam Amartthineer Niyaayakaetu Vaayaimooda Utthamar Athai Kantu Makizhuvaar Natakkum Vazhiyai Velicchamaakki Semmai Paathaiyil Natanthida Enakkum Kirupai Thandha Thaevaa Oti Mutitthida Arulumae