பாடல் #35624
இயேசு ராஜன் பெயரை
🔤 Yesu Raajan Peyarai
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜன் பெயரை சொன்னால் எத்தனை ஆனந்தம் - சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால் எத்தனை பேரின்பம் அவரை அறிவதே - எனக்கு நித்திய ஜீவனே தூய ஆவியே - என்னில் நிரம்பி வழியுதே - தேவ 1. அழைத்தால் வருவேன் அணைத்துக்கொள்வார் ஆறுதல் தந்திடுவார் நினைத்ததெல்லாம் செய்து முடிக்கும் ஆற்றல் வழங்கிடுவார் அவரைப் போல் ஒரு தெய்வமில்லை அவனியில் எவரையும் கண்டதில்லை 2. வானத்திலிருந்து வந்தவர் - எம் பாவத்தையெல்லாம் தீர்த்தவர் - நீல வானத்தின்கீழே பூமியின் மேலே எங்கும் உயர்ந்தவர் வழுக்கி விழுந்தால் தூக்கிடுவார் வலக்கரம் நீட்டி தேற்றிடுவார் 3. நம்பிக்கை தருவார் நடந்து சென்றால் நிழலாய் இருந்திடுவார் நான் செல்லும் படகு அசையாதிருக்க நங்கூரமாகிடுவார் நித்திய தேவா நின்திருபாதம் நிதமும் நானும் தொழுதிடுவேன் 4. கேட்டால் கொடுப்பார் ஜெபித்தால் தருவார் தேவாதி தேவனவர் கேளாததெல்லாம் வேண்டுவதெல்லாம் ஏராளம் வழங்கிடுவார் நம்பிக்கையோடே கேட்டிடுவோம் நல்லவர் சித்தம் செய்திடுவோம் 5. மகிமையின் தேவன் மகத்துவராஜன் மதில்கள் தாண்டிட செய்வார் மாறாத தேவன் மறுரூபமாக்கி மகிமையில் சேர்த்திடுவார் முழுமனதுடனே துதித்திடுவோம் முழங்கால்படியிட்டு முழங்கிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajan Peyarai Sonnaal Etthanai Aanandham - Sondha Iratsakaraaga Aerrukkontaal Etthanai Paerinbam Avarai Arivathae - Enakku Nitthiya Jeevanae Thooya Aaviyae - Ennil Nirampi Vazhiyuthae - Thaeva 1. Azhaitthaal Varuvaen Anaitthukkolvaar Aarudhal Thanthituvaar Ninaitthathellaam Seythu Mutikkum Aartral Vazhangkituvaar Avaraip Pol Oru Theyvamillai Avaniyil Evaraiyum Kandathillai 2. Vaanatthilirunthu Vandhavar - Em Paavatthaiyellaam Theertthavar - Neela Vaanatthinkeezhae Poomiyin Maelae Engkum Uyarndhavar Vazhukki Vizhunthaal Thookkituvaar Valakkaram Neetti Thaerrituvaar 3. Nampikkai Tharuvaar Natanthu Senraal Nizhalaay Irunthituvaar Naan Sellum Pataku Asaiyaathirukka Nangkooramaakituvaar Nitthiya Thaevaa Ninthirupaadham Nidhamum Naanum Thozhuthituvaen 4. Kaettaal Kotuppaar Jepitthaal Tharuvaar Thaevaathi Devanavar Kaelaadhathellaam Vaentuvathellaam Aeraalam Vazhangkituvaar Nampikkaiyotae Kaettituvom Nallavar Sittham Seythituvom 5. Makimaiyin Devan Makatthuvaraajan Mathilkal Thaantida Seyvaar Maaraadha Devan Maruroobamaakki Makimaiyil Saertthituvaar Muzhumanathudanae Thuthitthituvom Muzhangkaalpatiyittu Muzhangkituvom