பாடல் #35623
உந்தன் பாதங்களில் வீழ்ந்து
🔤 Undhan Paadhanggalil Veezhnthu
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் பாதங்களில் வீழ்ந்து கதறும் பாவியென்னை நோக்கி பாரும் ஐயா எந்தன் பாவம் நீங்க திரு சிலுவையில் வடிந்த அன்பு போதும் ஐயா செம்மையான பாதை என்னை நடத்தும் உண்மை அன்பு வேறெங்கும் கிடைக்கும் 1. உலகத்தார் பாவங்கள் எண்ணாமலே ஒப்புரவாக்கும் தேவனே மீண்டும் ஒருமுறை தூக்கியெடுப்பீர் சேற்றிலிருந்தென்னை உயர்த்திடுவீர் - செம்மை 2. மிகுந்த தாழ்மை சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவராய் ஒருவரையொருவர் அன்பு தாங்கி ஆவியில் ஒருமையை காத்துக்கொள்வேன் - செம்மை 3. முந்தின நடக்கை அகற்றிவோம் பழைய மனிதனை களைந்திடுவோம் உள்ளத்திலே புது ஆவிபெறுவோம் புதிய மனிதனை தரித்துக்கொள்வோம் - செம்மை 4. கசப்பும் கோபமும் மூர்க்கமும் கூக்குரல் தூஷணம் நீக்கிடுவோம் மீட்பின் நாளுக்காய் முத்திரையாய் பெற்ற தூயாவியை துக்க படுத்தாதிருப்போம் - செம்மை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Paadhanggalil Veezhnthu Katharum Paaviyennai Nokki Paarum Aiyaa Endhan Paavam Neengga Thiru Siluvaiyil Vatindha Anpu Pothum Aiyaa Semmaiyaana Paathai Ennai Natatthum Unmai Anpu Vaerengkum Kitaikkum 1. Ulakatthaar Paavanggal Ennaamalae Oppuravaakkum Devanae Meentum Orumurai Thookkiyetuppeer Saerrilirunthennai Uyartthituveer - Semmai 2. Mikundha Thaazhmai Saandhamum Neetiya Porumaiyum Utaiyavaraay Oruvaraiyoruvar Anpu Thaangki Aaviyil Orumaiyai Kaatthukkolvaen - Semmai 3. Munthina Natakkai Agarrivom Pazhaiya Manidhanai Kalainthituvom Ullatthilae Puthu Aaviperuvom Puthiya Manidhanai Tharitthukkolvom - Semmai 4. Kasappum Kobamum Moorkkamum Kookkural Thooshanam Neekkituvom Meetpin Naalukkaay Mutthiraiyaay Pertra Thooyaaviyai Thukka Patutthaathiruppom - Semmai