பாடல் #35622
உப்பு தின்னவன் தண்ணீர்
🔤 Uppu Thinnavan Thanneer
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான் தப்பு செஞ்சவன் கண்ணீர் வடிப்பான் நினைத்ததை நடத்திட நினைத்தாலும் விதைத்ததை தானே அறுத்திடுவான் 1. பாவத்தின் சம்பளம் மரணம் வரும் நீதியில் பசிதாகம் திருப்தி தரும் இதய சுத்தம் இறை முகம் காட்டும் சாந்தகுணம் இகத்தை சுதந்தரிக்கும் 2. ஆவியில் எளிமை உள்ளவர்க்கு ஆண்டவர் இராச்சியம் உரிமையன்றோ நீதியின் நிமித்தம் பாடுபட்டால் பரம தேசம் நமக்கு சொந்தமாகும் 3. அந்தரங்க ஜெபத்துக்கு பலன் மிகுதி சந்தைவெளி வந்தனங்கள் வெறும் போலி குன்றின் மீது கட்டப்பட்ட நகராவோம் என்றென்றும் இகமெங்கும் ஒளிவீசுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uppu Thinnavan Thanneer Kutippaan Thappu Senjjavan Kanneer Vatippaan Ninaitthathai Natatthida Ninaitthaalum Vithaitthathai Thaanae Arutthituvaan 1. Paavatthin Sambalam Maranam Varum Neethiyil Pasithaagam Thirupthi Tharum Idhaya Suttham Irai Mugam Kaattum Saandhakunam Igatthai Sudhandharikkum 2. Aaviyil Elimai Ullavarkku Aandavar Iraachsiyam Urimaiyanro Neethiyin Nimittham Paatubattaal Parama Thaesam Namakku Sondhamaakum 3. Andharangga Jebatthukku Palan Mikuthi Santhaiveli Vandhananggal Verum Poli Kunrin Meethu Kattappatta Nakaraavom Enrenrum Igamengkum Oliveesuvom