பாடல் #35621
இலேசான காரியம் நான் பாடினேன்
🔤 Ilaesaana Kaariyam Naan Paatinaen
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இலேசான காரியம் நான் பாடினேன் - என் அஸ்திபாரம் இயேசு வென்று நான் பாடினேன் நடந்து நான் வந்த பாதையெல்லாம் - என்னை சுமந்த நாதனென்று துதிபாடினேன் 1. என்ன கொடுப்பேன் என் இயேசுவுக்கு - என்னை நேசித்ததேன் என்று சொல்லி பாடினேன் நன்மை கிருபை என்னை தொடர செய்யும் - இயேசு நல்லவர் நல்லவர் என புகழ்பாடினேன் 2. மனிதா மனிதா மானிட வாழ்வென்றும் நிலைப்பதில்லையென்று அன்று பாடினேன் கொஞ்சி கொஞ்சி பேசி மயக்கிடும் உலகில் தஞ்சம் அவர் சிலுவை என்று பாடினேன் - இலேசான 3. ஐயோ ஐயோ நகரம் எரியுமென்றேன் - அன்று நான் செய்த பாவங்கள் தெரியுதென்றேன் - இன்று யார் யாரோ என்பாடல் தமதென்று சொல்லி வர மன்னியும் இயேசையா என் பாடினேன் 4. கேட்டதையெல்லாம் தருவார் இயேசு என்றேன் - எந்தன் இதயம் சுமந்த காயம் குறைவு என்றேன் மலரிதழ் மேலே பனிதுளிப்போலவர் கல்வாரி அன்பில் உருகி பாடினேன் 5. நிலவும் வான்சுடரும் பாடுமென்றேன் - வீண் சலனம் கொண்ட மனம் வாடுமென்றேன் ஏழை என் மனமெங்கும் நிறைந்திருக்கும் - நம் இயேசுவே ஆண்டவர் என்று பாடினேன் - லேசான
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ilaesaana Kaariyam Naan Paatinaen - En Asthipaaram Yesu Venru Naan Paatinaen Natanthu Naan Vandha Paathaiyellaam - Ennai Sumandha Naadhanenru Thuthipaatinaen 1. Enna Kotuppaen En Yesuvukku - Ennai Naesitthathaen Enru Solli Paatinaen Nanmai Kirupai Ennai Thodara Seyyum - Yesu Nallavar Nallavar Ena Pugazhpaatinaen 2. Manithaa Manithaa Maanida Vaazhvenrum Nilaippathillaiyenru Anru Paatinaen Konjsi Konjsi Paesi Mayakkitum Ulakil Thanjjam Avar Siluvai Enru Paatinaen - Ilaesaana 3. Aiyo Aiyo Nakaram Eriyumenraen - Anru Naan Seytha Paavanggal Theriyuthenraen - Inru Yaar Yaaro Enpaadal Thamathenru Solli Vara Manniyum Yesaiyaa En Paatinaen 4. Kaettathaiyellaam Tharuvaar Yesu Enraen - Endhan Idhayam Sumandha Kaayam Kuraivu Enraen Malaridhazh Maelae Panithulippolavar Kalvaari Anpil Uruki Paatinaen 5. Nilavum Vaansudarum Paatumenraen - Veen Salanam Konda Manam Vaatumenraen Aezhai En Manamengkum Nirainthirukkum - Nam Yesuvae Aandavar Enru Paatinaen - Laesaana