பாடல் #3562
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
🔤 Manidhanae Nee Mannaaga Irukkinraay
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே! மறவாதே! மானிடர் வாழ்வு மாயையே - இந்த பூவும் புல்லும் போல மனிதன் புவியில் வாழ்கின்றாய் பாவங்கள் என்னும் பூக்கள் பூத்து பாரில் மறைகின்றான் பாவ வாழ்கை வாழும் மனிதன் புல்லின் பூவைப் போல் உலர்ந்து போவான் ஆஸ்தி செல்வம் அனைத்தும் சேர்த்து ஆனந்தம் கொண்டாய் - உன் ஆத்துமாவைப் பாதுகாக்க மறந்து போகின்றாய் இன்றிரவு நீ மரித்தால் யாருக்கு சொந்தமது எண்ணிப்பார் அதை எண்ணிப்பார் (2) உன் முடிவை எண்ணிப்பார் ஆவியை விடாதிருக்க உனக்கு ஆதிகாரமில்லை - ஆவி தன்னைத் தந்த தேவனிடம் தானாய் போய் சேர்ந்திடும் மண்ணானது மண்ணிடத்தில் வந்து சேர்ந்திடும் இது தான் மனிதன் முடிவே - யாரும் தப்பிக்க முடியாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidhanae Nee Mannaaga Irukkinraay Mannukkae Thirumpuvaay Maravaathae! Maravaathae! Maanidar Vaazhvu Maayaiyae - Indha Poovum Pullum Pola Manidhan Puviyil Vaazhkinraay Paavanggal Ennum Pookkal Pootthu Paaril Maraikinraan Paava Vaazhkai Vaazhum Manidhan Pullin Poovaip Pol Ularnthu Povaan Aasthi Selvam Anaitthum Saertthu Aanandham Kontaay - Un Aatthumaavaip Paathukaakka Maranthu Pokinraay Inriravu Nee Maritthaal Yaarukku Sondhamathu Ennippaar Athai Ennippaar (2) Un Mutivai Ennippaar Aaviyai Vitaathirukka Unakku Aathikaaramillai - Aavi Thannaith Thandha Devanidam Thaanaay Poy Saernthitum Mannaanathu Mannidatthil Vanthu Saernthitum Ithu Thaan Manidhan Mutivae - Yaarum Thappikka Mutiyaathae