பாடல் #35612
ஓவியமாய் என்னை
🔤 Oviyamaay Ennai
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓவியமாய் என்னை உள்ளங்கைகளில் வரைந்தவரே உம்மை போற்றிடுவேன் குளிர் நிழலாய் உந்தன் வலக்கர மறைவில் மறைத்தவரே உம்மை துதித்திடுவேன் காத்திருப்பேன் உம் கிருபைகள் தொடர பாத்திரமாய் என்னை மாற்றிடுமே 1. நீதி நிறைந்த உம் அரசினிலே எனக்கு ஆசனம் அளிப்பீர் அமர்ந்திடுவேன் தூதர்களை நியாயம் தீர்த்திடவே உரிமை தந்தவரின் பதங்கள் பணிந்திடுவேன் 2. நீதியெனும் ஆடையணிந்திடுவேன் - என் நேசரின் மார்பினில் சாய்ந்திடுவேன் மாதங்கள் தோரும் புதுக் கனி வழங்கும் ஜீவ மரங்கள் இடை உலவிடுவேன் 3. நீதியென்னும் கனியை விதைத்திடுவேன் - அங்கு நீதி சமாதானம் நிறைந்திருக்கும் நீதியின் தேவன் ஜொலித்திடுமாலயம் நீதியின் விருட்சமாய் நிலைத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oviyamaay Ennai Ullangkaigalil Varaindhavarae Ummai Porrituvaen Kulir Nizhalaay Undhan Valakkara Maraivil Maraitthavarae Ummai Thuthitthituvaen Kaatthiruppaen Um Kirupaigal Thodara Paatthiramaay Ennai Maarritumae 1. Neethi Niraindha Um Arasinilae Enakku Aasanam Alippeer Amarnthituvaen Thoodharkalai Niyaayam Theertthidavae Urimai Thandhavarin Pathanggal Paninthituvaen 2. Neethiyenum Aataiyaninthituvaen - En Naesarin Maarpinil Saaynthituvaen Maadhanggal Thorum Puthuk Kani Vazhangkum Jeeva Maranggal Itai Ulavituvaen 3. Neethiyennum Kaniyai Vithaitthituvaen - Angku Neethi Samaathaanam Nirainthirukkum Neethiyin Devan Jolitthitumaalayam Neethiyin Virutsamaay Nilaitthiruppaen