பாடல் #35609
மகிழ்ச்சியான குடும்பம்
🔤 Makizhchsiyaana Kutumbam
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்ச்சியான குடும்பம் கடவுள் வாழும் நந்தவனம் பொன்னும் பொருளும் வழங்கிடாத அன்பும் அறனுக்கு உறைவிடம் - மகிழ் 1. கணவன் மனைவி அன்பிலே புதைந்திருக்குது புது சுகம் - இவள் கடவுள் கொடுத்த வெகுமதியென அறிந்து கொண்டால் தனி சுகம் விட்டுக்கொடுத்தால் இன்பம் கொட்டி கிடக்குது எங்கும் ஈருடலும் ஓருயிராய் இணைவதுதான் இல்லறம் 2. கணவன் வார்த்தைக்கு கீழ்படி - என்றும் மகிழ்ச்சிக்கு அது முதற்படி-தன் மனைவி சொந்த மாம்சமென்று நேசிப்பதே முதற்பணி வாழ்வு தாழ்வு எதிலும் சுகத்திலும் சுகவீனம் சபையும் கிறிஸ்தும் இணைந்ததுபோல் உடலும் உள்ளமும் அர்ப்பணி 3. வேதவசனம் படிப்பதும் கரங்கள் கோர்த்து ஜெபிப்பதும் தூய ஆவி பெலத்தினாலே நிறைந்து சிலுவை சுமப்பதும் தூயகரங்கள் உயர்த்து சொந்த குடும்பத்தை நடத்து தூய தேவன் துணையிருப்பார் துன்பம் துயரம் விலக்கிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhchsiyaana Kutumbam Katavul Vaazhum Nandhavanam Ponnum Porulum Vazhangkitaadha Anpum Aranukku Uraividam - Makizh 1. Kanavan Manaivi Anpilae Puthainthirukkuthu Puthu Sugam - Ival Katavul Kotuttha Vekumathiyena Arinthu Kontaal Thani Sugam Vittukkotutthaal Inbam Kotti Kidakkuthu Engkum Eerudalum Oruyiraay Inaivathuthaan Illaram 2. Kanavan Vaartthaikku Keezhpati - Enrum Makizhchsikku Athu Mudharpati-than Manaivi Sondha Maamsamenru Naesippathae Mudharpani Vaazhvu Thaazhvu Ethilum Sugatthilum Sugaveenam Sapaiyum Kiristhum Inaindhathupol Udalum Ullamum Arppani 3. Vaedhavasanam Patippathum Karanggal Kortthu Jepippathum Thooya Aavi Pelatthinaalae Nirainthu Siluvai Sumappathum Thooyakaranggal Uyartthu Sondha Kutumbatthai Natatthu Thooya Devan Thunaiyiruppaar Thunbam Thuyaram Vilakkitum